ருசியான முட்டைகோஸ் கூட்டு மதிய உணவுக்கு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!

cabbage kootu
- Advertisement -

ஹோட்டல்களில் தரப்படும் அதே சுவையில் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டைகோஸ் கூட்டு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

எப்படி இந்த முட்டைகோஸ் கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
cabbage kootu
Print
5 from 1 vote

முட்டைகோஸ் கூட்டு | Cabbage Kootu Recipe In Tamil

ஹோட்டல்களில் தரப்படும் அதே சுவையில் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டைகோஸ் கூட்டு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
எப்படி இந்த முட்டைகோஸ் கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: cabbae kootu, முட்டைகோஸ் கூட்டு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ முட்டை கோஸ்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 2 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

பொடிக்க தேவையானவை:

  • ½ டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  • ½ சோம்பு சோம்பு

செய்முறை

  • முதலில் கடலை பருப்பை கழுவி மஞ்சள் பொடி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  • அடுத்து முட்டக்கோஸை பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  • பொடிக்க கொடுக்கப்பட்டுளவையை வாசனை வர வறுத்து பொடிக்கவும்.
  • அடுத்து பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் வெந்ததும்நறுக்கிய கோஸ் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.காய் அரை வெக்காடு வெந்ததும் இறக்கவும்.
  • அடுத்து அடுப்பில் வானலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயம், மிளகாய் வதக்கவும்.
  • பின் காய் கலவையைஅத்துடன் கொட்டி, பூண்டுப் பல்லை தட்டி சேர்த்து கொதிக்க விடவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து வறுத்த பொடி சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து கொதித்ததும் இறக்கவும்.
  • கடைசியாக அடுப்பில் சிறிய கடாயை வைத்து மீதமுள்ள எண்ணை ஊற்றி கடுகு&உளுந்து தாளித்து, இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து கூட்டில் கொட்டி இறக்கவும்.