பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான்.
பராத்தாக்களில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்து பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனால் நாம் இந்த பதிவில் கோதுமை மாவு வைத்து சுவையான முட்டைக்கோஸ் பராத்தா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பராத்தா பிரியர்களுக்கு இந்த மாறுதலான முட்டைக்கோஸ் பராத்தா நிச்சயம் பிடிக்கும். சிலருக்கு பராத்தா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பராத்தாவை கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள். பராத்தா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி முட்டைக்கோஸ் பராத்தா செய்யலாம் என்று பார்க்கலாம்.
முட்டைக்கோஸ் பராத்தா | Cabbage Paratha Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1/4 முட்டைக்கோஸ்
- 1/4 டீஸ்பூன் ஓமம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் முட்டைக்கோஸை கேரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் உப்பு, நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓமம் மற்றும் துருவிய முட்டைக்கோஸை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- பின் கோதுமை மாவை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவில் முட்டைகோஸ் கலவையை வைத்து நான்காக மூடி மீண்டும் தேய்க்கவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பராத்தாவை போட்டு சிறிதளவு நெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் பராத்தா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி வச்சு சுவையான ஆரோக்கியமிக்க கொத்தமல்லி பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்!