Advertisement
சைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான முட்டைகோஸ் மிளகு சாதம் இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க!

Advertisement

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான முட்டைகோஸ் சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் முடித்த மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

முட்டைகோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊற வைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த முட்டைகோஸ் வைத்து சுவையான மசாலா அரைத்து இந்த சாதத்தை செய்துவிட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். அதனால் இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Advertisement

முட்டைகோஸ் மிளகு சாதம் | Cabbage Pepper Rice Recipe In Tamil

Print Recipe
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று
Advertisement
வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான முட்டைகோஸ் சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் முடித்த மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது.
Course LUNCH
Cuisine Indian
Keyword Cabbage Pepper Rice
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 44

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 150 கி முட்டைகோஸ்
  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பில்லை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • இவை வதங்கியதும்‌ வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முட்டைக்கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரக தூள் சேர்த்து கலந்து எண்ணையிலேயே முட்டைகோஸை வேக வைக்கவும்.
  • முட்டைகோஸ் நன்றாக வெந்ததும், மிளகு தூள் மற்றும் வேக வைத்து சாதம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, காரமான முட்டைகோஸ் சாதம் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 44kcal | Carbohydrates: 5.2g | Protein: 3.1g | Fat: 0.1g | Sodium: 12mg | Potassium: 170mg | Fiber: 2.2g | Vitamin A: 98IU | Vitamin C: 36mg | Calcium: 40mg | Iron: 2.47mg

இதனையும் படியுங்கள் : ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

19 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago