Advertisement
சைவம்

குடைமிளகாய் மசாலா செஞ்சு சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்ட்டு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!

Advertisement

குடைமிளகாய் வச்சு பிரைடு ரைஸ் செஞ்சிருப்போம் ஆம்புலன்ஸ் செஞ்சிருப்போம் மேகில குடைமிளகாய் போட்டு செஞ்சிருக்கோம் இந்த மாதிரி குடைமிளகாய் வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம் ஆனால் குடைமிளகாய் வச்சு ஏதாவது காரசாரமா கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா இல்ல அப்படின்னா இந்த குடைமிளகாய் கிரேவிய இந்த குடைமிளகாய் மசாலாவ ஒரே ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த டேஸ்டுக்கு அடிமையாகிடுவீங்க.

சாதம் சப்பாத்தி பூரி இட்லி, தோசை அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் இருக்கும். அது மட்டுமில்லாமல் சுட சுட சாதத்துல இந்த கிரேவிய ஊத்தி சாப்பிட்டோம்னா இதுக்கு சைட் டிஷ் கூட வெல்ல அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். வேணும்னா மேல கொஞ்சம் நல்லெண்ணெய் கூட ஊத்தி சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும். வீட்ல பெருசா எந்த காய்கறியும் இல்ல குடி மிளகாய் தான் இருக்கு அப்படின்னா கவலையே படாதீங்க அந்த குடைமிளகாய் வச்சு சூப்பரான குடைமிளகாய் மசாலா செஞ்சுடலாம்.

Advertisement

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிட வாங்க பொதுவா உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க பழைய சாதத்துக்கு இந்த குடைமிளகாய் மசாலாவை வைத்து சாப்பிட்டு பாருங்க இவ்வளவு பழைய சாதம் இருந்தாலும் காலியாகிடும் தயிர் சாதத்துக்கும் ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். இப்ப வாங்க இந்த செம சூப்பரான குடைமிளகாய் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

குடைமிளகாய் மசாலா | Capsicum Masala Recipe In Tamil

Print Recipe
சாதம் சப்பாத்தி பூரி இட்லி, தோசை அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் இருக்கும்.அது மட்டுமில்லாமல் சுட சுட சாதத்துல இந்த
Advertisement
கிரேவிய ஊத்தி சாப்பிட்டோம்னா இதுக்கு சைட்டிஷ் கூட வெல்ல அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். வேணும்னா மேல கொஞ்சம் நல்லெண்ணெய்கூட ஊத்தி சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும். வீட்ல பெருசா எந்த காய்கறியும்இல்ல குடி மிளகாய் தான் இருக்கு அப்படின்னா கவலையே படாதீங்க அந்த குடைமிளகாய் வச்சுசூப்பரான குடைமிளகாய் மசாலா செஞ்சுடலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Capsicum Masala
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 284

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 குடை மிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் எள்
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • கடாயில் எண்ணெய் ஊற்றி குடை மிளகாயை சேர்த்து எண்ணெயிலேயே 15 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்
  • மற்றொரு கடாயில் எள் வேர்க்கடலை தேங்காய் துருவல் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் மல்லி விதைகள் அனைத்தையும்சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து அதனையும்அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு அதனுடன் தக்காளி மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு மிளகாய் தூள் பூண்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • குடைமிளகாயை வதக்கிய அதே எண்ணெயில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு குடை மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடங்களுக்கு பிறகு கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 284kcal | Carbohydrates: 231g | Protein: 21g | Sodium: 180mg | Potassium: 13.2mg | Vitamin A: 13IU | Calcium: 2mg
Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

34 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago