திருவையாறு அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க! தித்திக்கும் சுவையில் அட அட!
திருவையாறு என்பது தியாகராஜ சுவாமிகளின் இல்லம், உலகப் புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒன்றாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் மட்டுமே கிடைக்கும் அசோக அல்வா இங்கு மிகவும் சிறப்பானது. அசோகா ஹல்வா பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. மற்ற வகை அல்வாக்கள
திருவையாறு என்பது தியாகராஜ சுவாமிகளின் இல்லம், உலகப் புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒன்றாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் மட்டுமே கிடைக்கும் அசோக அல்வா இங்கு மிகவும் சிறப்பானது.
அசோகா ஹல்வா பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. மற்ற வகை அல்வாக்களை விட இது மிகவும் சுலபம். அதே நேரத்தில், சுவை அமோகமாக இருக்கும். பாசிப்பருப்பை வைத்து நெய் சேர்த்து செய்ய படுவதால் , இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட.
மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.