குடைமிளகாய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

- Advertisement -

குடைமிளகாய் பொரியல் சாப்பிடவே யாருக்குமே பிடிக்காது. இந்த மாதிரி ஒரு தடவை குடைமிளகாய் வச்சு பொரியல் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. குழமிளகாய் வச்சு நல்லா கிரேவி செஞ்சு அதை சப்பாத்திக்கு சைடிஷா வச்சு சாப்பிட்டிருப்பீங்க. ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் எது செஞ்சாலும் அது கூட இந்த குடைமிளகாய சேர்த்து செஞ்சா டேஸ்ட்டா இருக்கும். ஆம்லெட் போடும்போது கூட குடை மிளகாய் சேர்த்து போட்டு செஞ்சா அது ஒரு தனி ருசியா இருக்கும். ஆனா குடைமிளகாய் மட்டும் வைத்து தனியா ஒரு பொரியல் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க ஆனா அதுக்குன்னு ஒரு மசாலா வறுத்து அரைச்சு இந்த மாதிரி அந்த பொரியல் செஞ்சு கொடுத்த பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

இந்த பொரியல காரக்குழம்புக்கு ரசத்துக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த குடைமிளகாய் பொரியல்ல சாதம் போட்டு கூட கிளறி குழந்தைகளுக்கு குடைமிளகாய் சாதமா கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருவாங்க இதுல நம்ம தேங்காய் துருவல் வேர்க்கடலை எல்லாம் சேர்க்கிறதால டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு புது டேஸ்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -

இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா நீங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாக்கணும். எப்பவுமே கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல் அவரைக்காய் பொரியல் உருளைக்கிழங்கு பொரியல் ஒரே மாதிரி செஞ்சு செஞ்சு வீட்டுல இருக்குறவங்களுக்கு கொடுக்காமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தீங்கன்னா சாப்பிடறவங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் செய்ற உங்களுக்குமே சமைக்கிறதுக்கு இன்ட்ரஸ்டா இருக்கும். அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க.

டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குறவங்க விரும்பி சாப்பிடுவாங்க. குடைமிளகாயில நிறைய சத்துக்கள் இருக்கு கர்ப்பிணி பெண்கள் எல்லாம் குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடலாம். இது ஒரு நீர் காய் அப்படின்றதால சிறுநீரகப் பிரச்சனை இருந்தால் கூட சரியாகும். இவ்வளவு ஆரோக்கியமான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மசாலா வறுத்து அரைத்து செய்யக்கூடிய குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

குடைமிளகாய் பொரியல் | Capsicum Poriyal Recipe In Tamil

குடைமிளகாய் பொரியல் சாப்பிடவே யாருக்குமே பிடிக்காது. இந்த மாதிரி ஒரு தடவை குடைமிளகாய் வச்சு பொரியல் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. குடைமிளகாய் வச்சு நல்லா கிரேவி செஞ்சு அதை சப்பாத்திக்கு சைடிஷா வச்சு சாப்பிட்டிருப்பீங்க. ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் எது செஞ்சாலும் அது கூட இந்த குடைமிளகாய சேர்த்து செஞ்சா டேஸ்ட்டா இருக்கும் ஆம்லெட் போடும்போது கூட குடை மிளகாய் சேர்த்து போட்டு செஞ்சா அது ஒரு தனி ருசியா இருக்கும் ஆனா குடைமிளகாய் மட்டும் வைத்து தனியா ஒரு பொரியல் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க ஆனா அதுக்குன்னு ஒரு மசாலா வறுத்து அரைச்சு இந்த மாதிரி அந்த பொரியல் செஞ்சு கொடுத்த பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க இந்த பொரியல காரக்குழம்புக்கு ரசத்துக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Capsicum Poriyal
Yield: 4 People
Calories: 135kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 குடைமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 3 வர மிளகாய்
  • 3 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • குடைமிளகாயை உப்பு தண்ணீரில் கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு சோம்பு வேர்க்கடலை சேர்த்து வறுத்ததும் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
  • அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • குடைமிளகாயை சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு பத்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  • பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 135kcal | Carbohydrates: 3.1g | Protein: 9g | Fat: 2.4g | Sodium: 72mg | Potassium: 148mg | Vitamin C: 169mg | Calcium: 31mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த குடைமிளகாய் மசாலா சாதம் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

-விளம்பரம்-