அடுத்தமுறை வீடே மணக்கும் படி ருசியான குடைமிளகாய் சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க அற்புதமான ருசியில் இருக்கும்!
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இந்த சாம்பாரும் ஒன்று. ஒரு நல்ல விசேஷம் என்றால் சாம்பார
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இந்த சாம்பாரும் ஒன்று. ஒரு நல்ல விசேஷம் என்றால் சாம்பார் இல்லாமல் நிச்சயம் இருக்காது. குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு இட்லி, தோசையாக இருக்கும். அதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவோம்.
எப்போதும் இதே வைத்து சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். புதிதாக செய்தால் சுவையாக, டேஸ்டாக, சாப்பிட ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் சாம்பார் செய்து பாருங்க. குடைமிளகாயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. எனவே அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். குடைமிளகாயை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் குடைமிளகாய் சாம்பார். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!