Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Carrot Kheer
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த ரெசிபி உங்களுக்கு தான்! இதில் அனைவருக்கும் பிடித்த கேரட் மில்க் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2026.04.30பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு சுவையான கேரட் மில்க் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள் விரும்பி குடிப்பார்கள்!!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த ரெசிபி உங்களுக்கு தான்! இதில் அனைவருக்கும் பிடித்த கேரட் மில்க் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த

PK
எழுதியவர்Prem Kumar30 ஏப்ரல், 2026 அன்று 01:58 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Drinks

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த ரெசிபி உங்களுக்கு தான்! இதில் அனைவருக்கும் பிடித்த கேரட் மில்க் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் மில்க் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.

இந்த கேரட் மில்க் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான மில்க் ஆகும். எப்பொழுதும் டீ, காபி, பால், கூல் ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த கேரட் மில்க் நாம் செய்து குடிக்கலாம். இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கமாக கேரட் வைத்து பொரியல், சாம்பார், சூப் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

இந்த சுவையான கேரட் மில்க் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இதனை கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் மில்க் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது சுவையான கேரட் மில்க் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு குக்கரில் கேரட், முந்திரி, 1 கப் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பின் இதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதன்பிறகு ஒரு கடாயில் ஊற வைத்த ஜவ்வரிசி மற்றும் பால் சேர்த்து நன்கு வேக விடவும். பின் நாம்‌ அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  3. 3

    பின் இதில் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கேரட் மில்க் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 52 கலோரி
  • கொழுப்பு · 4.1g
  • புரதம் · 35g
  • கார்போஹைட்ரேட் · 6g
தலைப்புகள்
#கேரட் மில்க்#கேரட் கேக்#கேரட் கீர்#கேரட் சூப்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement