Home சைவம் கேரட் சாதம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க யாருமே பிடிக்கலனு சொல்லவே மாட்டாங்க!!

கேரட் சாதம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க யாருமே பிடிக்கலனு சொல்லவே மாட்டாங்க!!

பொதுவா ஸ்கூல் போற காலேஜ் போற உங்க குழந்தைகளுக்கு குழம்பு ஊத்தி கிளறி சாதம் கொடுக்கிறதுக்கு பதிலா ஏதாவது கலவை சாதம் செஞ்சு கொடுத்தா மதியம் வரைக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில கலவை சாதங்கள் நிறைய இருக்கு. புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம் வெஜ் சாதம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா குழந்தைகள் சுத்தமா விரும்பி சாப்பிடாத காய்கறிகள் நிறைய இருக்கு அதுல குழந்தைகளுக்கு ஒரு சூப்பரான கலவை சாதம் செஞ்சு கொடுத்தா அவங்க அந்த காய்கறிகளை சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

-விளம்பரம்-

அந்த வகையில பீட்ரூட் சாதம் கேரட் சாதம் இது எல்லாமே குழந்தைகளுக்கு கொடுக்கணும் இன்னைக்கு நம்ம கேரட் சாதம் தான் பார்க்க போறோம். ஆனா குழந்தைகளுக்கு கொடுக்கிற அந்த கேரட் சாதத்தை பெரும்பாலும் வீட்ல இருக்க கூடிய பெரியவங்க சாப்பிட மாட்டாங்க. ஆனா இப்ப நம்ம செய்ய போற இந்த கேரட் சாதத்தை குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. அதுக்கு காரணம் நம்ம இதுக்கு ஒரு மசாலா அரைச்சு சேர்க்கப்போறோம்.

பொதுவா சின்ன வெங்காயம் அரைச்சு செய்கிற எல்லா ரெசிபிஸ்மே சூப்பரா இருக்கும். அந்த வகையில இந்த கேரட் சாதத்துக்கு சின்ன வெங்காயம் பூண்டு, இஞ்சி காய்ந்த மிளகாய் எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு நல்லா எண்ணெயில் வதக்கி கேரட்டை துருவி சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் சேர்த்து செய்ற இந்த கேரட் சாதம் அவ்ளோ ருசியா இருக்கும். இந்த கேரட் சாதத்துக்கு எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது. வேணுனா அப்பளம் பொரிச்சு சாப்பிடலாம் அதுவே ரொம்ப டேஸ்டா இருக்கும்.

ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு மட்டும் இல்லாம நீங்களே வீட்ல லஞ்சுக்கு அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. இதுல கேரட் துருவி சேர்த்து நல்லா வதக்குறனால கேரட் இருக்கிற இடமே தெரியாது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.இப்ப வாங்க இந்த சுவையான மசாலா அரைச்சு சேர்த்து செய்யக்கூடிய கேரட் சாதம் சட்டுனு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கேரட் சாதம் | Carrot Sadam Recipe In Tamil

பொதுவா ஸ்கூல் போற காலேஜ் போற உங்க குழந்தைகளுக்கு குழம்பு ஊத்தி கிளறி சாதம் கொடுக்கிறதுக்கு பதிலா ஏதாவது கலவை சாதம் செஞ்சு கொடுத்தா மதியம் வரைக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில கலவை சாதங்கள் நிறைய இருக்கு. புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம் வெஜ் சாதம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா குழந்தைகள் சுத்தமா விரும்பி சாப்பிடாத காய்கறிகள் நிறைய இருக்கு அதுல குழந்தைகளுக்கு ஒரு சூப்பரான கலவை சாதம் செஞ்சு கொடுத்தா அவங்க அந்த காய்கறிகளை சாப்பிட்ட மாதிரி இருக்கும். அந்த வகையில பீட்ரூட் சாதம் கேரட் சாதம் இது எல்லாமே குழந்தைகளுக்கு கொடுக்கணும் இன்னைக்கு நம்ம கேரட் சாதம் தான் பார்க்க போறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: north india
Keyword: Carrot Sadam
Yield: 4 People
Calories: 152kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 கேரட்
  • 1 கப் வடித்த பாசுமதி சாதம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • புதினா சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் தூள் குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • எண்ணெயிலேயே அனைத்தும் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்து வைத்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி எடுத்தால் சுவையான கேரட் சாதம் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 152kcal | Carbohydrates: 3.6g | Protein: 15g | Fat: 1.7g | Sodium: 93mg | Potassium: 134mg | Fiber: 8.5g | Vitamin A: 53IU | Vitamin C: 167mg | Calcium: 25mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும்!

-விளம்பரம்-