- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
பொதுவா முந்திரிப் பருப்பு வைத்து காஜூ கட்லி செஞ்சு இருப்பீங்க. முந்திரிப் பருப்பை கேசரியில் நிறைய போட்டு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில முந்திரிப் பருப்பு புலாவுக்கு சேர்த்து சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முந்திரிப்பருப்பு வைத்து ஒரு சூப்பரான மசாலா செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சப்பாத்திக்கு பூரிக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். இட்லி தோசைக்கு கூட இதை வச்சு சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும். பெரிய வெங்காயத்தையும் கொஞ்சம் முந்திரி பருப்பையும் நல்லா வேக வச்சு அரைச்சு அந்த விழுது சேர்த்து இந்த முந்திரி மசாலா செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.
உங்க வீட்ல நெய் சோறு புலாவ் இந்த மாதிரி செய்யும்போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம் கண்டிப்பா ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. வட இந்தியாவுல இது பேமஸான ஒரு ரெசிபி. ரெஸ்டாரண்ட்ல போய் இதை சாப்பிடுவதற்கு வீட்டிலேயே சூப்பரா செஞ்சு சாப்பிடலாம். முந்திரி பருப்பு கொஞ்சம் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரே ஒரு தடவை செஞ்சு சாப்பிடுறதுல தப்பு கிடையாது. இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம்.
முந்திரி மசாலா அப்படின்னு சொன்ன உடனே நிறைய பொருட்கள் போட்டு ரொம்ப நேரத்துக்கு செய்யணுமோ அப்படின்னு யோசிக்க வேண்டாம் சீக்கிரத்திலேயே செஞ்சிடலாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே போதுமானது தான். இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குறவங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தளிகள் வந்தா அவங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமா இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான முந்திரி பருப்பு வச்சு செய்யக்கூடிய முந்திரி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முந்திரி கேக் ஒருமுறை இப்படி மட்டும் வீட்டில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து ஒரு பெரிய வெங்காயம் 50 கிராம் முந்திரி சேர்த்து வேகவைத்து எடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் சீரகம், பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முந்திரி மசாலா தயார்.






