- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான முந்திரி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதுவரை எத்தனையோ வகையான சாத ரெசிபியை செய்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் வித்தியாசமான அதே சமயம் ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ரெசிபி செய்ய போகிறோம்.
குழந்தைகளுக்கு வெரைட்டி ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவர்களுக்கு இந்த முந்திரி சாதத்தை செய்து கொடுத்து விடுங்கள். இதற்கு சைடு டிஷ் கூட செய்ய தேவை இல்லை. குழந்தைகள் டிபன் பாக்ஸுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து விட்டாலே போதும் அவர்கள் காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். சில சமயங்களில் வீட்டில் குழம்பு வைப்பதற்கு எதுவும் பொருட்கள் இல்லாத சமயத்தில் சிம்பிளா இந்த முந்திரி சாதம் செய்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள். இப்போது சுவையான முந்திரி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் அரிசி, உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், நெய், கொத்தமல்லி, புதினா சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் நறுக்கிய வெங்காயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் பால் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் நாம் வடித்து வைத்துள்ள சாதம், காய்ச்சிய பால், சேர்த்து அதன்மேல் வறுத்து வைத்துள்ள முந்திரி, வெங்காயம் சேர்த்து மூடி வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முந்திரி சாதம் தயார்.






