- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
காலிஃப்ளவர் வைத்து பக்கோடா, காலிஃப்ளவர் 65, காலிஃப்ளவர் கிரேவி இதெல்லாம் செஞ்சு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி காலிபிளவர் மசாலா செஞ்சு பாருங்க ரொம்பவே டேஸ்டா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். இதை கொஞ்சம் நல்லா டிரையா செஞ்சா அதனை தக்காளி சாதம், லெமன் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம் சாம்பார் சாதத்திற்கும் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஒரு சிலருக்கு காலிஃப்ளவர் அப்படினாலே ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி காலிஃப்ளவர் பிரியாணிகளுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அசைவம் எடுத்து வீட்ல சமைக்க முடியாத நேரத்துல இந்த காலிபிளவர் தான் நமக்கு கை கொடுக்கும் அந்த மாதிரி சமயத்துல நீங்க சூப்பரான இந்த காலிஃப்ளவர் மசாலா செஞ்சு ருசிச்சு சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்திலையும் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான சூப்பரான காலிஃப்ளவர் மசாலா ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபிக்கு பெரிய வெங்காயத்தை நிறைய சேர்க்கணும் அதுவும் நல்லா பொன்னிறமா வதக்கணும் அப்பதான் இந்த ரெசிபி நம்ம நினைக்கிற அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா வரும். இப்ப வாங்க இந்த சுவையான காலிபிளவர் மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிரிஸ்பி கார்ன் ரெசிபி இப்படி செஞ்சா கார்ன் பிடிக்காதவங்க கூட காலி பண்ணிடுவாங்க!!
Ingredients
Method
காலிபிளவரை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வதக்கியதும் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சீரகத்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலிஃப்ளவரை சேர்த்துக் கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக வேக வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் மசாலா தயார்.






