ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம்.
இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃப்ளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம்.
நமது வீட்டில் காலிஃப்ளவரை வறுவல், 65 போன்று செய்து குடுத்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் கிரேவிக்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் பன்னீர் மசாலா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
காலிஃப்ளவர் பன்னீர் மசாலா | Cauliflower Paneer Masala Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் காலிஃப்ளவர்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1/4 கப் பன்னீர்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். பச்சை பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பன்னீரை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணி, காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
- பின் காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகாய் தூள், காய்ந்த மாங்காய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போக வதக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான காலிஃப்ளவர் பன்னீர் மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால் இப்படி கிரீன் காலிஃப்ளவர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!