- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது.
இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்குச் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள்.
மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம். நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆனால் அதேயே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவர் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து அதில் காலிஃப்ளவரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, பட்டை, கிராம்பு, வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் காலிஃப்ளவரை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும். ஐந்து நிமிடம் நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான காலிஃப்ளவர் சுக்கா தயார்.






