- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
சப்பாத்தி என்றாலே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலர் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சப்பாத்தி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் ‘சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி’ மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சப்பாத்திக்கு எந்த சைட்டிஷூம் இல்லாமல் சப்பாத்திக்குள் எதையாவது ஒளித்து வைத்துக் கொடுத்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். வெறும் சப்பாத்தியை விட இதுபோன்ற ஸ்டஃப்டு சப்பாத்திகள் பெரும்பாலானோர் விரும்பும் வகையறாக்களில் ஒன்று.
பெரிய அளவில் சைடிஷ் எதுவும் செய்யாமல் இந்த சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தியை செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் அழகாக சாப்பிட்டு முடிப்பார்கள். இதன் சுவையும் வாயில் வைத்த உடனே அருமையாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு இது எப்பொழுதும் செய்யும் சப்பாத்தியை விட மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
ஒரு முறை இதனை செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளி செல்லும் போது காலையில் இதனை சட்டென செய்து அவர்களின் லஞ்ச் பாக்சில் வைக்க முடியும். வாருங்கள் இந்த சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
கோதுமை மாவுடன் உப்பு, சோடா உப்பு மற்றும் நெய் சேர்த்து, வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து காற்று புகாத டப்பாவில் போட்டு அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
குக்கரில் கடலைப்பருப்புடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் மிளகு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
வெந்ததும் குக்கரைத் திறந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
கலவை நன்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவைச் சிறு உருண்டையாக எடுத்து வட்டமாகத் தேய்த்து, அதன் நடுவில் சிறிதளவு கடலைப்பருப்புக் கலவையை வைத்து மூடி உருண்டையாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து சப்பாத்தியைப் போட்டுச் சுட்டெடுக்கவும்.
டேஸ்டி சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.






