இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு ஏற்ற சுவையான சப்பாத்தி குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். முக்கியமாக இதனுடன் சப்பாத்தி செய்து சாப்பிடும் பொழுது இதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போல் ஒரு முறை இந்த சப்பாத்தி குருமாவை உங்கள் வீட்டில்
இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி ?
உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் ஒரு சப்பாத்தி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு சப்பாத்தி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த சப்பாத்தி குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சப்பாத்தி குருமா | Chappathi Kurma Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
குக்கரில் வேக வைக்க
- ½ கப் வெள்ளை கொண்டை கடலை ஊற வைத்தது
- ½ கப் பட்டாணி ஊற வைத்தது
- 2 உருளை கிழங்கு பாதியாக வெட்டியது
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
குருமா செய்ய
- 2 tbsp எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 பட்டை
- 3 கிராம்பு
- 3 ஏலக்காய்
- ½ tsp சோம்பு
- 2 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
- 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 தக்காளி நீள்வாக்கில் நறுக்கியது
- 5 பீன்ஸ் பொடியாக நறுக்கியது
- 2 கேரட் பொடியாக நறுக்கியது
- ½ tsp மஞ்சள் தூள்
- ½ tsp கரம் மசாலா
- ½ tsp சோம்பு தூள்
- 2 tsp மல்லி தூள்
- 1 tsp மிளகாய் தூள்
- குக்கரில் வேக வைத்த பொருட்கள்
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் வெள்ளை கொண்டை கடலை மற்றும் பட்டாணி எடுத்துக்கொண்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஊற வைத்த கொண்டைக்கடலை மற்றும் பட்டாணியை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போன்ற பொருட்களை சேர்த்து வறுத்து. பின் இதனுடன் நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்து வந்தவுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின் பீன்ஸ், கேரட் ஓரளவு வெந்தவுடன் இதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, சோம்பத்தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் மசலா வாடை போகும் வரை வதக்கி வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து விட்டு கலந்து கொள்ளுங்கள்.
- பின் நாம் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் பட்டாணியை தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு. பின் சிறிது கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவு தான் சுவையான சப்பாத்தி குருமா இனிதே தயாராகி விட்டது.