- Advertisement -
இந்த வார சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குருமா செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
-விளம்பரம்-
தேவையான பொருட்கள் : காரசாரமான பஞ்சாபி சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
அந்த வகையில் நாட்டுக்கோழி குருமா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இந்த குருமா தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்த்து இந்த வார கடைசியில் இந்த நாட்டு கோழி குருமாவை செய்து சுவைத்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.
நாட்டுக்கோழி குருமா | Nattu Kozhi Kuruma Recipe In Tamil
இந்த வார சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குருமா செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. அந்த வகையில் நாட்டுக்கோழி குருமா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இந்த குருமா தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Yield: 4 people
Calories: 231kcal
Equipment
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ நாட்டுக்கோழி
- 10 சின்ன வெங்காயம்
- 3 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா பவுடர்
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- ½ மூடி தேங்காய்
- 1 டேபிள் ஸ்பூன் கசகசா
- முந்திரி தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனதும், தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும், மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
- மசாலாவில் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும். அதில் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- இப்பொழுது சுவையான நாட்டுக்கோழி குருமா தயார்.
Nutrition
Serving: 500கிராம் | Calories: 231kcal | Carbohydrates: 14g | Protein: 25g | Fat: 8g | Cholesterol: 26mg | Sodium: 18mg