- Advertisement -
பொதுவாக சிக்கன் வகையில் நிறைய ரெசிபிகள் நாம் செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் பஞ்சாபி சிக்கனையும் ஒரு முறை செய்து பாருங்கள். நாம் சாதாரணமான சிக்கன் குழம்பை அவ்வளவு ருசியாக இருக்கும் பொழுது இந்த பஞ்சாபி சிக்கன் எவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இந்த பஞ்சாபி சிக்கன் ரெசிபி இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த வாரம் கடைசியிலேயோ அல்லது வருகின்ற தீபாவளிக்கு இந்த பஞ்சாபி சிக்கனை செய்து பாருங்கள். இதை எப்படி செய்யவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளங்கங்களை படித்து பார்த்து இதை செய்து பாருங்கள் அற்புதமான சுவையில் இருக்கும்.
-விளம்பரம்-
பஞ்சாபி சிக்கன் குழம்பு | Punjabi Chicken Recipe In Tamil
பொதுவாக சிக்கன் வகையில் நிறைய ரெசிபிஸ் ட்ரை பன்னிருப்பிங்க அந்தவகையில் பஞ்சாபி சிக்கனையும் ஒரு முறை செய்து பாருங்கள். நாம் சாதாரணமான சிக்கன் குழம்பே அவ்வளவு ருசியாக இருக்கும் பொது இந்த பஞ்சாபி சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இந்த ரெசிபி இருக்கும்.இந்த வாரம் கடைசில் இந்த பஞ்சாபி சிக்கனை செய்து பாருங்கள். இதை எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கு படித்து பார்த்து ட்ரை பண்ணி பாருங்க அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
Yield: 5 people
Calories: 225kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ கோழிக்கறி
- 4 பெரிய வெங்காயம்
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 5 ஏலக்காய்
- பட்டை சிறுதுண்டு
- 4 கிராம்பு
- 6 பல் பூண்டு
- இஞ்சி சிறுதுண்டு
- 1 டேபிள் ஸ்பூன் தனியா
- 2 காய்ந்தமிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 2 பிரிஞ்சி இலை
- ¾ கப் தயிர்
- 150 கிராம் நெய்
- கொத்தமல்லி தேவையான அளவு
- 1 குழி கரண்டி எண்ணெய்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் கோழி கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
- பிறகு இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, ஆகிய வற்றை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் கடையை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் கொழித்துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் பிரிஞ்சி இலை, அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பிறகு வருது வைத்துள்ள கொழித்துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், தயிர் ஊற்றி தயிர் மணம் கோழி இறைச்சில் இறங்கும் வரை மிதமான தீயில் வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியினைத் தூவி குறைந்த தீயில் மேலும் வேக வைக்கவும். மசாலா கலவை நன்கு கரைந்து, இறைச்சிலும் படிந்த பிறகு இறக்கி கொத்தமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.
Nutrition
Serving: 500gram | Calories: 225kcal | Carbohydrates: 2g | Protein: 21g | Fat: 14g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg