- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
சென்னா மசாலா செய்வதற்கு மசாலா வறுத்து அரைச்சு வெங்காயம் தக்காளி வதக்கி அதையும் அரைச்சு சேர்த்து சென்னா மசாலா வைக்க தேவையில்லை பத்து நிமிஷம் இருந்தா போதும் சூப்பரா சட்டுனு சென்னா மசாலா செஞ்சுடலாம். இந்த சென்னா மசாலாவை சப்பாத்தி கூட வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த மாதிரி ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு சென்னா மசாலா இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு ரொம்ப சிம்பிள் ஒன் பாட் ரைஸ் மாதிரி ஒன் பாட் சென்னா மசாலா இது. காலைல உங்க குழந்தைகள் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே இந்த சென்ன மசாலா செஞ்சு அது கூட சப்பாத்தி செஞ்சு பிரேக் பாஸ்ட் இல்ல நான் லஞ்சுக்கு சிம்பிளா கொடுத்து விடலாம். அதுக்காக பெருசா கஷ்டப்படணும் அப்படின்ற அவசியமே கிடையாது. இப்ப வாங்க சுவையான சென்னா மசாலா சட்டுனு பத்து நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான இந்த சுண்டல் கூட்டு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
Ingredients
Method
ஒரு குக்கரில் 8 மணி நேரம் ஊற வைத்த கருப்பு சுண்டலை சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை, மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சீரகத்தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு பட்டர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்த ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்த்து அதனுடன் கஸ்தூரி மேத்தி சேர்த்து அதனை குக்கரில் சேர்த்து விட்டால் சுவையான சென்னா மசாலா தயார்.






