- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
கருப்பு சுண்டலா இருந்தாலும் சரி வெள்ளை சுண்டலா இருந்தாலும் சரி அதுல நிறைய சத்துக்கள் இருக்கு நிறைய ப்ரோட்டீன் இருக்கிறதால உடல் எடையை குறைக்கிறவங்களில் இருந்து எல்லாருமே இந்த சுண்டலை அடிக்கடி சாப்பிடலாம். ஆனா இந்த சுண்டலை அப்படியே வேக வச்சு மட்டும் சாப்பிடுவதற்கு அவ்ளோ ருசியா இருக்காது. நிறைய மசாலாக்கள் சேர்த்து அதுவும் உங்க வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சூப்பரான ஒரு சுண்டல் கூட்டு செஞ்சு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். ரசம் சாதத்துக்கு இந்த சுண்டல் கூட்டு செஞ்சு சைடிஷா வச்சு சாப்பிட்டா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த சுண்டல் கூட்ட கொஞ்சம் கிரேவி பதத்துக்கு வச்சு நீங்க சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். ஸ்கூலுக்கு போற உங்க குழந்தைகளுக்கு இந்த சுண்டல் கூட்டு செஞ்சு கொடுத்து விடுங்க ஆரோக்கியமான உணவு. வீட்ல சுண்டல் இருந்தா இன்னைக்கே கூட கண்டிப்பா இந்த சுண்டல் கூட்டு செஞ்சு பாருங்க உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவுமே சென்னா மசாலா சுண்டல் புளிக்குழம்பு அப்படின்னு வைக்காம ஒரு தடவை இந்த சிம்பிளான சுண்டல் போட்டு செஞ்சுதான் பாருங்களேன் கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சிம்பிள் ருசியான சுண்டல் கூட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட தள்ளுவண்டி கடை சமோசா சுண்டல் மசாலா இப்படி வீட்டில் செய்து பாருங்கள்!
Ingredients
Method
சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் சுண்டலை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் அரைத்து வைத்த விழுது உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்து சுண்டலுடன் சேர்த்து விட்டால் சுவையான சுண்டல் கூட்டு தயார்.






