காரசாரமான ருசியில் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!

ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு, பொரியல் செய்யப்படுகிறது. அதிலும் ஆந்திராவில் செய்யப்படும் உணவு என்றால் அது மிகவும் காரணமாக இருக்கின்றது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவு வகைகள் மிதம

By Prem Kumar · 12/1/2024

ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு, பொரியல் செய்யப்படுகிறது. அதிலும் ஆந்திராவில் செய்யப்படும் உணவு என்றால் அது மிகவும் காரணமாக இருக்கின்றது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவு வகைகள் மிதமான காரத்துடன் இருக்கும். அவ்வாறு செட்டிநாடுகளில் செய்யும் உணவுகள் எப்பொழுதும் மசாலா வாசனை அதிகமாகவே இருக்கும். இவ்வாறு செய்யப்படும் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். எனவே தான் செட்டிநாடு சமையல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது.

மதியம் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்யுங்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன, பலரும் வேண்டாம் என்று ஒதுக்கக் கூடிய ஏழையின் காய்கறிகளில் ஒன்றான கத்திரிக்காய் பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்த காய்கறி ஆகும். கத்திரிக்காய் போன்ற காய்களை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள தயங்குவார்கள். கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு, அலர்ஜி போன்றவை வரும் என்ற மூடநம்பிக்கையால் அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த கத்திரிக்காய் சிறுநீரக கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது.

ஆஸ்துமா, கீழ்வாதம் பித்தம் சளி மலச்சிக்கல் உடல் பருமன் வாத நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது இந்த கத்தரிக்காய். இந்த செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கத்திரிக்காய் வைத்து பொரியல், சாம்பார், குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் போன்ற ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான கத்திரிக்காய் வறுவல் செய்து பாருங்கள். இந்த கத்திரிக்காய் வறுவல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!

Recipes AMP · Quick view
View full