- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் நம்ம வீட்ல வாழைக்காய் வறுவல் செஞ்சாலும் அது ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி இல்லையே அப்படின்னு ரொம்ப ஃபீல் பண்ணி இருப்போம். எப்படி ஹோட்டல்ல அவ்ளோ ருசியா வாழைக்காய் வறுவல் செய்யறாங்க அப்படின்னு நிறைய யோசிச்சி இருப்போம் ஆனால் அதுக்கான ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம். கல்யாண வீடு ஹோட்டல் போன்ற இடங்களில் கிடைக்கக்கூடிய ருசியான வாழ்க்கை வருவல் அதுவும் செட்டிநாட்டு ஸ்டைல்ல சூப்பரான வாழைக்காய் வறுவல் செஞ்சு அசத்திடுவோம். இந்த செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் செய்வதற்கு நம்ம ஒரு மசாலா மட்டும் அரைக்கணும். அந்த மசாலாவுடன் வாசனையே பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து போகும் அந்த அளவுக்கு மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
இந்த ருசியான செட்டிநாட்டு வாழைக்காய் வறுவல் உங்க வீட்ல ஒரே ஒரு முறை செஞ்சு பாருங்க ஹோட்டல்ல கிடைக்கிற அதே சுவைல இருக்கும் வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. உங்க வீட்டில சைவம் விருந்து படைக்க போறீங்க அப்படின்னா அப்போ மறக்காம இந்த வாழைக்காய் வறுவல அதுல சேர்த்துக்கோங்க. வீட்ல ஏதாவது சின்னதா விசேஷங்கள் வரும்போதும் எப்பவும் ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு மசாலா முட்டைக்கோஸ் பொரியல் எப்படி செய்யாம இந்த செட்டிநாட்டு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் செஞ்சு பாருங்க. சுவை தாறுமாறா இருக்கும். சும்மா ரசம் வச்சு இந்த வாழைக்காய் வறுவல் வச்சா கூட ருசி அவ்ளோ அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான செட்டிநாட்டு ஸ்டைல் வறுத்து அரைச்ச வாழைக்காய் வறுவல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!
Ingredients
Method
வாழைக்காயை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு அரை வேக்காடு வேக வைத்து இறக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு, சோம்பு,காய்ந்த மிளகாய்,தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கிய பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வேக வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான செட்டிநாட்டு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் தயார்.






