- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
முட்டை அப்படினாலே வந்து அது ஒரு நல்ல ஒரு சத்துள்ள ஒரு உணவு தான். அதுல வந்து நிறைய புரதச்சத்து இருக்கு. இன்றைக்கு இந்த முட்டையில தான் நம்ம ஸ்பெஷலா ஒரு குழம்பு வைக்கப் போறோம் அப்படி என்ன செய்ய போறோம் அப்படினா செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளபோகிறோம். பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். இப்படி சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. எப்போதும் முட்டையில செய்ற சமையல் வித்தியாசமா செய்யும் பொழுது முட்டைய விரும்பி சாப்பிடாத குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதற்காக இந்த மாதிரி முட்டையில் வித்தியாசமா செய்து அவங்க விரும்பாமலையும் அந்த உணவோட சத்து அவங்களுக்கு கொடுக்கறதுக்கு விதவிதமான விஷயங்கள் செய்யணும். சரி வாங்க செட்டிநாடு முட்டை குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் உங்களுக்கு தேவையான முட்டைகளை எடுத்துக்கொண்டு அதை வேக வைத்து ஓடுகளை நீக்கி விட்டு தனியாக வைக்க வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதன் பிறகு துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாயை, மிளகு போன்றவற்றை வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஆறவைக்க வேண்டும். ஆறவைத்த பிறகு அதை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதன் பிறகு வேகவைத்த முட்டையை கத்தியால் கீற வேண்டும்.
கீறுவதினால் குழம்பு அதில் சேர்வதினால் சுவையாக இருக்கும். கீறிய முட்டைகளை சிறிது நேரம் அதில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். குழம்புக்கு தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து விட வேண்டும். கலந்த பிறகு மூடியை போட்டு மூட வேண்டும்.
மசாலா நன்றாக வெந்த பிறகு கீறி வைத்த முட்டையை பொறுமையாக குழம்பில் வைக்க வேண்டும்.
உங்களுக்கு குழம்பு கெட்டியாக வேண்டும் என்றால் கெட்டி பதம் வரும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்த பிறகு எலுமிச்சை சாறை பிழிந்து விட வேண்டும். இப்பொழுது சுவையான செட்டிநாடு குழம்பு தயார்.






