- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவாக நெய் சாதம் என்றால், சாதத்தில் நெய்யை ஊற்றி கிளறி கொடுப்போம். ஆனால் இந்த நெய் சாதத்திலேயே சில வகைகள் உள்ளன. அதுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு மாறுபடும். மேலும் நெய் சாதம் ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இப்போது அந்த வகையில் சிக்கன் நெய் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம். நெய் சாதம் என்று சொன்னாலே பிடிக்காது என்று யாருமே சொல்லமாட்டார்கள். பொதுவாக நெய் சாதம் என்றாலே எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் இந்த சிக்கன் நெய் சாதத்தை செய்து கொடுத்தலே போதும், குழந்தைகள் அதிகமாவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நெய் சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த சிக்கன் நெய் சாதத்தை செய்து கொடுங்கள். வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த வகையில் நெய் சாதம் ஊட்டச்சத்து மிக்கது. நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக இந்த சிக்கன் நெய் சாதம் செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இப்போது சுவையான சிக்கன் நெய் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நெய் முட்டை மசாலா
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு அலசி விட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா, மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் இதனை எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு தக்காளி விழுது மற்றும் உலர் திராட்சையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கி அதனுடன் நாம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விட்டு, கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி, புதினா தூவி இறக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி, திராட்சை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுக்கவும்.
பின் அதே குக்கரில் சிறிதளவு நெய் சேர்த்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நாம் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். பின் நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, வெங்காயம் மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் நெய் சாதம் தயார்.






