- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
உணவு பிரியர்களையும் பரோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பிரியாணிக்கு அடுத்தப்படியாக உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி, தேடி தேடி உண்ணும் உணவாக உள்ளது பரோட்டா. வெறும் பரோட்டா என ஒரு வார்த்தையில் முடித்து விட முடியாது. பரோட்டாவிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வாழை இலை பரோட்டா, கிழி பரோட்டா, கொத்து பரோட்டா, கறி பரோட்டா, கொஸ்து பரோட்டா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரோட்டா பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது கொத்து பரோட்டா. கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. ஹோட்டல்களில் சாப்பிடும் பலர், பெரும்பாலும் சிக்கன் கொத்து பரோட்டா சாப்பிடுவது வழக்கம். சிக்கன் கொத்து பரோட்டா என்றாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு சிக்கன் கொத்து பரோட்டாவின் சுவை அருமையாக இருக்கும்.
இளைஞர் பட்டாளம் மத்தியில் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் கொத்து பரோட்டாவிற்கு என ஒரு தனி வரவேற்பு உண்டு. முட்டை, கறி குழம்பு, கொத்தமல்லி, மல்லி தூள் சேர்த்து கமகம சுவையில் சுடச்சுட பரிமாறப்படும் கொத்து பரோட்டா சென்னைவாசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் உணவாக உள்ளது. கூடவே இதனுடன் சால்னா கொஞ்சம் ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் 2 அல்லது 3 பரோட்டாக்கள் மற்றும் முந்தைய நாள் செய்த மீதமுள்ள சிக்கன் துண்டுகள் இருந்தால் போதும் இதை மிக எளிதாக செய்து விடலாம். மேலும் மீதமுள்ள சிக்கன் துண்டுகள் வீணாகாமல் இருப்பது மட்டுமின்றி அதை வித்தியாசமான முறையில் கொத்து பரோட்டாவாக செய்து சுவைக்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா வீட்ல இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி சுவை தான்!
Ingredients
Method
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கெட்டியானதும், சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின்னர் கிரேவி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் இதனுடன் கட் செய்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.






