- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
சிக்கன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் கோழிக்கால் வைத்து ஒரு சூப்பரான சுக்கா ரெசிபி செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்துக்கு இந்த ரெசிபியை போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ரெசிபி நீங்க செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு ரெசிபி. இந்த ரெசிபி செய்றதுக்கு முன்னாடி மஞ்சள் தூள் போட்டு கோழிக்காலை சுத்தம் செய்ய வேண்டும். அப்ப தான் எந்த வாசனையும் வராது. இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து பாருங்க. எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்கக்கூடிய மசாலாக்கள் மட்டுமே போதுமானது. எக்ஸ்ட்ரா எந்த மசாலாவும் சேர்க்க தேவையே இல்லை. தக்காளி கூட சேர்க்க தேவையில்லை தயிர் சேர்த்து செஞ்சாலே அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பா இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்திருக்கவே மாட்டீங்க கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கடைசியாக கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும். அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
கோழிக்காலை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு கோழிக்கால் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது தயிர் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் சுருள சுருள வதக்கி கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கோழிக்கால் சுக்கா தயார்.






