இந்த வெயிலுக்கு ஏத்த சுவையான சப்போட்டா மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

என்னதான் நிறைய பழங்கள் இருந்தாலும் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு விதமான பழங்கள் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சப்போட்டா பழம் ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சப்போட்டா சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா சப்போட்டா பழத்துல நிறைய நார்ச்சத்துக்களும் நிறைய ஆரோக்கியமான சத்துக்களும் இருக்கு அதனால கண்டிப்பாக சப்போட்டா பழம் நம்ம சாப்பிடணும்.

-விளம்பரம்-

ஆனா சப்போட்டா பழம் சாப்பிடவே அடம் பிடிக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த சப்போட்டா மில்க் ஷேக் போட்டு கொடுத்தா ரொம்பவே விரும்பி குடிப்பாங்க. இந்த வெயிலுக்கு மில்க் ஷேக் போட்டு அத அப்படியே பிரிட்ஜில் வைத்து ஜில்லுனு கொடுத்தா குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமா சூப்பரா இருக்கும்.

- Advertisement -

இதுல இந்த பழங்களோட இனிப்பு மட்டுமே போதும் நம்ம எக்ஸ்ட்ரா எந்த சர்க்கரையும் சேர்க்கவே தேவையில்லை சர்க்கரையை சேர்க்காமல் இயற்கையாகவே குடிக்கிறதால இந்த சப்போட்டா மில்க் ஷேக் நமக்கு ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னா இருக்கும். சப்போட்டா மில்க் ஷேக் பிடிக்காதவங்களே கூட வாங்கி வாங்கி குடிப்பாங்க.

பொதுவா இந்த மில்க் ஷேக் கடைகள்ல தான் வாங்கி குடிச்சி இருப்போம் ஆனால் கடைகளில் கிடைக்கிற அதே டேஸ்ட்ல அதைவிட ஆரோக்கியமான முறையில் நம்ம வீட்டிலேயே சூப்பரா இந்த சப்போட்டா மில்க் ஷேக் செய்யலாம். இப்ப வாங்க இந்த ஹெல்த்தியான டேஸ்ட்டான வெயிலுக்கு ஏத்த ஒரு சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

சப்போட்டா மில்க் ஷேக் | Chikku Milk Shake Recipe In Tamil

சப்போட்டா பழம் சாப்பிடவே அடம் பிடிக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த சப்போட்டாமில்க் ஷேக் போட்டு கொடுத்தா ரொம்பவே விரும்பி குடிப்பாங்க. இந்த வெயிலுக்கு மில்க்ஷேக் போட்டு அத அப்படியே பிரிட்ஜில் வைத்து ஜில்லுனு கொடுத்தா குடிக்கிறதுக்கு தொண்டைக்குஇதமா சூப்பரா இருக்கும். பொதுவா இந்த மில்க் ஷேக் கடைகள்ல தான் வாங்கி குடிச்சி இருப்போம் ஆனால் கடைகளில் கிடைக்கிற அதேடேஸ்ட்ல அதைவிட ஆரோக்கியமான முறையில் நம்ம வீட்டிலேயே சூப்பரா இந்த சப்போட்டா மில்க்ஷேக் செய்யலாம். இப்ப வாங்க இந்த ஹெல்த்தியான டேஸ்ட்டான வெயிலுக்கு ஏத்த ஒரு சூப்பரானசப்போட்டா மில்க் ஷேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Chikku Milk shake
Yield: 4
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 சப்போட்டா பழம்
  • 2 வாழைப்பழம்
  • 1 கப் பால்
  • 4 பேரிச்சம்பழம்
  • 2 டீஸ்பூன் தேன்
  • ஐஸ்கட்டிகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் சப்போட்டா பழத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு சதையை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் வாழைப்பழம் பேரிச்சம்பழம் தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  • இறுதியாக பால் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  • ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து இந்த மில்க்ஷேக்கை ஊற்றி பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க்ஷேக் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 64mg | Potassium: 153mg | Vitamin C: 3.8mg

இதையும் படியுங்கள் : மாதுளம் பழ வைத்து தான் இந்த பொரியல் செய்தேன் என்று சொன்னா ஆச்சர்யபடும் அளவிற்கு இப்படி செய்து பாருங்க!

-விளம்பரம்-