- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- dinner
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மைகளை நமக்கு தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் காலிஃப்ளவர் வைத்து ஒரு சுவையான ரெசிபியை பார்க்க உள்ளோம். இந்த காலிஃப்ளவர் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உடல் வலிமை கிடைக்க உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. காலிஃப்ளவரானது புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் தடுத்து, இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை பலப்படுத்துகிறது.
இவ்வளவு நன்மைகளை தருகின்ற காலிஃப்ளவர் வைத்து சூப்பரான சில்லி கோபி ட்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சில உணவுகள் மட்டுமே பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் அந்த உணவுகளை யாரிடம் கேட்டாலும் எனக்கு பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். அதில் ஒன்றுதான் காலிஃப்ளவர் சில்லி. இதனை எப்போதாவது நம் வீடுகளில் செய்து சாப்பிடுவோம் ஆனால் பெரும்பாலும் செய்வது கிடையாது. ஆகையால் இந்த காலிபிளவர் சில்லியை எப்படி வீட்டில் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
இதனையும் படியுங்கள் : கேஎஃப்சி ஸ்டைல் காலிஃப்ளவர் இனி வீட்டிலேயே இப்படி ஈசியாக செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவரை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிது நேரம் சுடு தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
பின் காலிஃப்ளவரை தண்ணீர் வடித்து விட்டு அதனுடன் கடலை மாவு, உப்பு, சிவப்பு கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், அரிசி மாவு, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் நாம் வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு ட்ரை ஆகும் வரை வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை மற்றும் வெள்ளை எள் தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சில்லி கோபி ட்ரை தயார்.






