- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் காலிஃப்ளவர் ஃப்ரை முதலிடத்தில் உள்ளது. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் காலிஃப்ளவர் ஃப்ரை அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் இதுபோன்ற உணவுகள் தேவைப்படுக்கின்றன. அடிக்கடி வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் விளைவிக்கும். அதற்காக சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு சிறந்த தீர்வு வீட்டிலேயே செய்து சாப்பிடுவது.
வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கும், குழந்தைகளுக்கும் பயப்படாமல் கொடுக்கலாம். எனவே, இந்த பதிவில் வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைலில் காலிஃப்ளவர் ஃப்ரை செய்வது எப்படி? என்பதை பார்ப்போம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேஎஃப்சி சிக்கனுக்கு போட்டியாக, கேஎஃப்சி ஸ்டைல் காலிஃபிளவர் ரெசிபி ஒருமுறை செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சிக்கன் சாப்பிட்ட ஒரு ஃபீல் கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது சைவத்தில் வித்யாசமான டிஷ் செய்து சாப்பிட வேண்டும் என்றாலோ தாராளமாக கேஎஃப்சி ஸ்டைல் காலிஃப்ளவர் ரெசிபி செய்து சாப்பிடலாம். மாலைநேர ஸ்னாக்ஸாகவோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை சந்தோஷப்படுத்த இந்த ரெசிபியை செய்து அசத்தலாம்.
இதனையும் படியுங்கள் : காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காலிஃப்ளவரை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் மைதா மாவு, சோள மாவு, மிளகு தூள், மிளகாய் தூள், நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு பவுளில் சோளமாவு, மைதா மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஏற்கனவே மாவில் புரட்டி வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக இந்த மாவில் நனைத்து பின் ஓட்ஸில் நன்கு புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவர் துண்டுகளாக ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேஎஃப்சி ஸ்டைல் காலிஃப்ளவர் தயார்.






