ஒரு சிலருக்கு 65 ரெசிபி சாப்பிடுவதை விட அதை கொஞ்சமா சாஸ் சேர்த்து வதக்கி மஞ்சூரியன் மாதிரி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். அந்த வகையில காலிஃப்ளவர் மஞ்சூரியன் சிக்கன் மஞ்சூரியன் இறால் மஞ்சூரியன் ஃபிஷ் மஞ்சூரியன் அப்படின்னு நிறைய இருக்கு ஆனா இன்னைக்கு நம்ம சைவ பிரியர்களுக்காக காளான் வச்சு ஒரு சூப்பரான மஞ்சூரியன் மாதிரி இருக்க கூடிய சில்லி காளான் ரெசிபி சாப்பிட்டு பாருங்க. இந்த சில்லி காளான் ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் வீட்ல ஏதாவது பிரைடு ரைஸ் முட்டை சாதம், மிளகு சாதம் அப்படின்னு செய்யும்போது இதை மட்டும் சைடு டிஷ்ஷா செஞ்சிங்கனா கண்டிப்பா கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது ஃபுல்லா காலி ஆகிவிடும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த மாதிரி ஏதாவது சிம்பிளான சாதம் கொடுக்கும் போது அதுக்கு சைட் டிஷ்ஷா இத செஞ்சு கொடுத்து அனுப்புங்க. வீட்லயுமே ஹோட்டல் ஸ்டைல்ல ஒரு சில்லி காளான் செய்யணும் அப்படின்னு தோணுச்சுன்னா கண்டிப்பா இந்த ரெசிபியை அப்படியே ஃபாலோ பண்ணிக்கோங்க கண்டிப்பா ஹோட்டல்ல கிடைக்குற அதே சுவையில் கிடைக்கும். சுவையான இந்த சில்லி காளான் ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் செஞ்சு குடுங்க இதை சைடிஷா மட்டும் இல்லாம ஈவினிங் டைம்ல சும்மா ஸ்னாக்ஸ் மாதிரியே சாப்பிடலாம்.
சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலர் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சில்லி காளான் செஞ்சு சாப்பிடணும்னு நினைச்சு நினைச்சு ஏமாந்து போயிருப்பாங்க அந்த மாதிரி இருந்தவங்க இந்த ரெசிபியை அப்படியே ஃபாலோ பண்ணி செஞ்சீங்கன்னா கண்டிப்பாக ஹோட்டல்ல கிடைக்கிறதை விட சுவையாவே நீங்க வீட்ல செய்ய முடியும். வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு இத சாப்பிடுறதுக்கு கொடுத்தீங்களா பாராட்டிட்டு எப்படி செஞ்சீங்கனு ரெசிபி கேட்டுட்டு தான் போவாங்க. அந்த அளவுக்கு இது சுவையா இருக்கும். இப்ப வாங்க இந்த ஹோட்டல் ஸ்டைல் சில்லி காளான் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
சில்லி மஷ்ரூம் | Chilli Mushroom Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கி காளான்
- 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 டீஸ்பூன் சோயா சாஸ்
- 1 டீஸ்பூன் வெள்ளை எள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- வெங்காயத்தாள் சிறிதளவு
- 1 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சோள மாவு
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 குடைமிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
செய்முறை
- காளானை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மைதா மாவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கிய பிறகு சதுர வடிவில் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- தக்காளி சாஸ் சில்லி சாஸ் பச்சை மிளகாய் சோயா சாஸ் அனைத்தையும் சேர்த்து கிளறி சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- ஐந்து நிமிடத்திற்கு பிறகு பொரித்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக கிளறி பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுவையான சில்லி மஸ்ரூம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!