- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
சோயா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சோயாவில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும் போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் சோயாவை பயன்படுத்தி சில்லி சோயா செய்து பார்க்கலாம்.
எல்லோருக்கும் சோயா பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த சில்லி சோயாவை ஒரு முறை செய்து பாருங்கள். நம்முடைய அன்றாட உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம் ஆகும்.
அசைவம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், அதிகப் புரதச்சத்து தேவைப்படுபவர்கள் சோயா ஒரு சிறந்த மாற்று வழியாக உள்ளது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு தசை பலவீனம், நகங்கள் உடைதல், முடி உதிர்தல், சரும பிரச்சனைகள், அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அறிகுறிகளை காணலாம். எனவே உணவில் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புரதம் நிறைந்த சைவ உணவுகளில் நாம் சோயாவை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கும் மற்றும் அலுவல் பணி முடித்து வரும் பெரியவர்களுக்கும் வித்தியாசமாக என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கும் போது, நீங்கள் இந்த ருசியான ஸ்நாக்ஸை தாராளமாக செய்து தரலாம். இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சாதத்துடனும் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். இப்ப வாங்க சுவையான சில்லி சோயா எப்படி செய்வதென்று பார்ப்போமா.
இதனையும் படியுங்கள் : மீல் மேக்கர் கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டீ டைம்க்கு ரொம்ப சூப்பரா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் சோயாவை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சதுரமாக சற்று பெரியதாக நறுக்கி கொள்ளவும்.
பின் சோயாவை நன்கு தண்ணீரை பிழிந்து விட்டு, அதனுடன் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயாவை ஒவ்வொன்றாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், குடைமிளகாய், சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர், மிளகு தூள், சோயா சாஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு சோள மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து வதக்கவும்.
பின் பொரித்து வைத்துள்ள சோயா, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு வெங்காயத்தாள், பச்சை மிளகாய் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சில்லி சோயா தயார்.






