Home ஸ்நாக்ஸ் மீல் மேக்கர் கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டீ டைம்க்கு ரொம்ப...

மீல் மேக்கர் கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டீ டைம்க்கு ரொம்ப சூப்பரா இருக்கும்!!

மாலை நேரத்தில் டீ காபியோட சாப்பிடுறதுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் இருந்தா சூப்பரா இருக்கும் அப்படின்னு நமக்கு தோணும். அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே பஜ்ஜி போண்டா வடை அப்படின்னு செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா மீல்மேக்கர் வச்சு இந்த மாதிரி ஒரு கட்லெட் செஞ்சு பாருங்க. இதுல நம்ம பிரட் கிரம்ஸ் இருக்குறதால மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல மைதா மாவு சேர்க்கிறதால மசாலா பிரியாம அப்படியே நமக்கு ஒரு சூப்பரான கட்லெட் கிடைக்கும்.

-விளம்பரம்-

மாலை நேரத்தில் டீ காபியோட இந்த கட்லெட் பரிமாறி பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் பஜ்ஜி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை கட்லெட் செஞ்சு குடுங்க கண்டிப்பா சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க அது கூட கொஞ்சமா தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு மீல்மேக்கர் கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது.

அதுல உடம்புக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் நிறையவே இருக்கு. பொரியல் கூட்டு மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் சாப்பிட மாட்டிக்கிறாங்க அப்படின்னா இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதை குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் செஞ்சு கொடுத்துவிடலாம். இல்ல அப்படின்னா குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு செஞ்சு ரெடியா வச்சு இருக்கலாம் கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்டுட்டு சமத்தா உட்கார்ந்து படிப்பாங்க.

சுவையான இந்த மீல்மேக்கர் கட்லெட் கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க இதுல பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்க்கறதால வாசனையாகவும் இருக்கும். ருசியான இந்த மீல்மேக்கர் கட்லெட்டை கண்டிப்பா நீங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. என்னதான் நிறைய கட்லெட் வகைகள் இருந்தாலும் இந்த கட்லெட் கொஞ்சம் டேஸ்டாவே இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான கட்லெட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

மீல் மேக்கர் கட்லெட் | Soya Chunks Cutlet Recipe In Tamil

மாலை நேரத்தில் டீ காபியோட சாப்பிடுறதுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் இருந்தா சூப்பரா இருக்கும் அப்படின்னு நமக்கு தோணும். அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே பஜ்ஜி போண்டா வடை அப்படின்னு செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா மீல்மேக்கர் வச்சு இந்த மாதிரி ஒரு கட்லெட் செஞ்சு பாருங்க. இதுல நம்ம பிரட் கிரம்ஸ் இருக்குறதால மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல மைதா மாவு சேர்க்கிறதால மசாலா பிரியாம அப்படியே நமக்கு ஒரு சூப்பரான கட்லெட் கிடைக்கும். மாலை நேரத்தில் டீ காபியோட இந்த கட்லெட் பரிமாறி பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் பஜ்ஜி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை கட்லெட் செஞ்சு குடுங்க கண்டிப்பா சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: Soya Chunks Cutlet
Yield: 4 People
Calories: 152kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 50 கி மீல் மேக்கர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் பிரெட் க்ராம்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • மீல் மேக்கரை சுடுதண்ணீரல் ஒரு மணி நேரம் ஊறவைத்து பிழிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
  • அதனுடன் மைதா மாவு குழம்பு மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில் கலந்து வைத்துள்ள மாவை தட்டி முக்கி எடுத்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கட்லெட் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 152kcal | Carbohydrates: 3.3g | Protein: 24g | Fat: 2.5g | Sodium: 113mg | Potassium: 238mg | Vitamin C: 290mg | Calcium: 21mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : எச்சில் ஊறும் நண்டு கட்லெட் மாலை வேளைக்கு இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

-விளம்பரம்-