Advertisement
சைவம்

மணமணக்கும் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

தற்போது வெளி மாநில உணவுகளை விரும்பி சாப்பிடும் பலர் அதன் சுவையை பற்றி கொஞ்சம் அதிகமாகவே தூவம் போடுகிறார்கள். நம் தமிழ்நாட்டிலேயே நாம் சாப்பிடாத உணவுகள் இன்னும் ஏராளமாக உள்ளனர். உதாரணமாக உங்கள் ஊர் பகுதிகளில் நீங்கள் ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்கிறீர்கள் என்றால் அதே காய்கறியை வைத்து தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் அவர்கள் ஒரு விதமான சுவையுடனும், மணத்துடன் அந்த பொரியலை செய்வார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி ?

Advertisement

இப்படி நம் தமிழ்நாட்டிலேயே மாறுபட்ட சுவையுடனும், மணமுடனும் பல உணவுகள் உள்ளது. அப்படி இன்று நாம் பார்க்க இருக்கிற பொரியல் தான் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல். இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் இந்த கத்திரிக்காய் பொரியல் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும். ஆகையால் இன்று சிதம்பரம் கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் | Chithambaram Brinjal Poriyal Recipe in Tamil

Print Recipe
உங்கள் ஊர் பகுதிகளில் நீங்கள் ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்கிறீர்கள் என்றால் அதே காய்கறியை வைத்து தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் அவர்கள் ஒரு விதமான சுவையுடனும், மணத்துடன் அந்த பொரியலை செய்வார்கள். இப்படி நம் தமிழ்நாட்டிலேயே மாறுபட்ட சுவையுடனும், மணமுடனும் பல உணவுகள் உள்ளது. அப்படி இன்று நாம் பார்க்க இருக்கிற பொரியல் தான் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல். இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் இந்த கத்திரிக்காய் பொரியல் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும்.
Course LUNCH, poriyal
Cuisine Indian, TAMIL
Keyword Brinjal, கத்தரிக்காய்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 100

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Ingredients

வறுத்து பொடி அரைக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 2 tbsp மல்லி
  • 4 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை

கத்தரிக்காய் பொரியல் செய்ய

  • 3 tbsp எண்ணெய்
  • 4 கத்தரிக்காய்
  • 1 கப் சின்ன வெங்காயம் நறுக்கியது
  • ¼ கப் புளி கரைசல்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • ½ tbsp மிளகு
  • கருவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி, பின் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் கத்திரிக்காய் பொரியலுக்கு மசாலா பொடி அரைக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,
    Advertisement
    எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் வர மல்லி, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • மல்லி நன்றாக வறுபட்டதும் கடாயை இறக்கி வருத்த பொருட்கள் சிறிது நேரம் குளிர வைத்து அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் குக்கரில் வேகவைத்த கத்திரிக்காயை எடுத்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட்டு கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள் பின்பு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இதனுடன் நான் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி அதனுடன் நாம் மசித்து வைத்திருக்கும் கத்திரிக்காயையும் சேர்த்து கிளறி விடுங்கள்.
  • பின்பு இதனுடன் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சிதம்பரம் கத்திரிக்காய் பொரியல் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 100kcal | Carbohydrates: 24g | Protein: 4g | Fat: 0.8g | Sodium: 8mg | Potassium: 1050mg | Fiber: 12g | Sugar: 14g

English Overview : brinjal poriyal is one of the most important dishes in india. brinjal poriyal recipe or brinjal poriyal seivathu eppadi or brinjal poriyal in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

9 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

10 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

11 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

13 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

13 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

15 மணி நேரங்கள் ago