Advertisement
அசைவம்

மிருதுவான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி ?

Advertisement

ருசியான மற்றும் மிருதுவான மட்டன் கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை.

அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த மட்டன் கோலா உருண்டையை செய்து பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.

Advertisement

இதையும் படியுங்கள் ; காரசாரமான மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி ?

மட்டன் கோலா உருண்டை எப்படி செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருள்கள், மற்றும் செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அற்புதமான சுவையில் இருக்கும்.

மட்டன் கோலா உருண்டை | Mutton Kola Urundai Recipe in Tamil

Print Recipe
ருசியான மற்றும் மிருதுவான மட்டன் கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த மட்டன் கோலா உருண்டையை பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword mutton kola urundai, மட்டன் கோலா உருண்டை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 6 people
Calories 246

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • ¼ கிலோ மட்டன் கொத்துக்கறி
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது.
  • 6 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி தேங்காய்ப் பால்
  • கடலைமாவு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை
    Advertisement
    சிறிதளவு

Instructions

  • முதலில் ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி, எலும்புகள் இல்லாதவாறு வாங்கிக்கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • பின்பு கொத்துக்கறியை உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பின்பு வேகவைத்த கொத்துக்கறியை ஆரிய பின், அதில் தண்ணீர் இருந்தால் அவற்றை பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் பால், கொத்தமல்லி இலை, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
  • இந்த கலவையில் சிறிது கடலை மாவை சேர்த்து சிறு சுண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை அதில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சவையான மற்றும் மெருதுவான மட்டன் கோலா உருண்டை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 40gram | Calories: 246kcal | Carbohydrates: 9g | Protein: 28g | Saturated Fat: 1.5g | Cholesterol: 16mg | Sodium: 0.56mg | Potassium: 458mg | Sugar: 1.07g
Advertisement
swetha

Recent Posts

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

2 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

6 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

6 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

8 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

9 மணி நேரங்கள் ago