இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் சோலே கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்.
பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் கொண்டைக்கடலை வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. இந்த சோலே கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த சோலே கிரேவி பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
சோலே கிரேவி | Chole Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 2 கப் வெள்ளை கொண்டை கடலை
- 1/2 டீஸ்பூன் சமையல் சோடா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1/2 கப் வெங்காய விழுது
- 1/2 கப் தக்காளி விழுது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- 1/4 கப் பிரஷ் கீரிம்
செய்முறை
- முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து, பின் குக்கரில் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் வெங்காயம் விழுது மற்றும் தக்காளி விழுது, சமையல் சோடா சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, வேக வைத்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
- பின் குக்கரை திறந்து ஃப்ரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சோலே கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பஞ்சாப் சிக்கன் மிளகு கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!