- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நீர் காய்கறிகளான புடலங்காய், சௌசௌ காய், முள்ளங்கி, பூசணிக்காய், வெள்ளரிக்காய் இதெல்லாம் வாரத்தில் இரண்டு மூன்று தடவை எடுத்துக் கொள்வது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்பில் இருக்கக்கூடிய நிறைய பிரச்சனைகள் சரியாகும் முக்கியமா சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகள் சரியாகும். உடல் சூடு தணியும் உடலில் நீர்ச்சத்து கம்மியா இருந்தா இந்த காய்கறிகள் அதுக்கு உதவியா இருக்கும். ஒவ்வொரு காய்கறிகளையும் வைத்து ஒவ்வொரு விதமான ரெசிபி செய்து சாப்பிடலாம்.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம சௌசௌ வைத்து சிம்பிளான ஒரு சௌசௌ பொரியல் செய்ய போறோம். இந்த சௌசௌ வைத்து பருப்பு கூட்டு, சாம்பார் எல்லாமே வச்சு சாப்பிட்டிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா பொரியல் செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். இதுக்கு நிறைய பெரிய வெங்காயம் சேர்த்து காரத்துக்கு காய்ந்த மிளகாய் சேர்த்து செய்யப் போறோம். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் லைட்டா தண்ணீர் தெளித்து இதனை வேக வைத்தாலே போதுமானது. பத்து நிமிஷத்துல ரெடியாகிவிடும்.
கடைசியா தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து இறக்கினால் செம்ம டேஸ்ட்டா இருக்கும். காரசாரமா காரக்குழம்பு வத்த குழம்பு இதெல்லாம் வைத்து அதுக்கு சைட் டிஷ் ஆக இந்த ரெசிபியை வைத்து சாப்பிடலாம். சுவை ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த டேஸ்டான சௌசௌ பொரியல் ஒரே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சௌசௌ பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சிம்பிளா இருந்தாலும் டேஸ்டாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சௌசௌ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான சௌ சௌ தயிர் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
சௌசௌ காயை பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு போட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான சௌசௌ காய் பொரியல் தயார்.






