கொத்தவரங்காய் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு கொத்தவரங்காய் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கொத்தவரங்காய் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுகிட்டு இருக்கீங்க. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
கொத்தவரங்காய் பருப்பு உசிலி | Cluster Beans Paruppu Usili
கொத்தவரங்காய் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு கொத்தவரங்காய் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கொத்தவரங்காய் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுகிட்டு இருக்கீங்க. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
Yield: 4
Calories: 153kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கொத்தவரங்காய்
- 1 கப் துவரம் பருப்பு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு சிறிது
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 6 காய்ந்த மிளகாய்
- பெருங்காயம் சிறிதளவு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறியபருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- பருப்பு பாதி வெந்ததும் மஞ்சள் தூள்சேர்த்து கிளறி, நறுக்கிய கொத்தவரங்காயைச் சேர்த்து வேக விடவும்.
- காயும், பருப்பும் நன்குவெந்து கலந்த பிறகு,ஒரு வாணலியில்எண்ணெய் விட்டு கடுகுபோட்டுத் தாளித்து கொத்தவரங்காயுடன் சேர்க்கவும். கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார். தேவை என்றால்தேங்காய்த் துருவலைஇறுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
Nutrition
Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 20g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g | Sugar: 2g