- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தினமும் மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். ஆனால், எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் தேங்காய் பால் கொண்டு இந்த பிரியாணி செய்வதால் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும், அதேசமயம் செய்வதும் சுலபம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த ரெசிபியை நீங்கள் குழந்தைகளின் மதிய உணவிற்கு கூட செய்து கொடுக்கலாம். பொதுவாக வீட்டில் செய்யும் உணவுகளை குழந்தைகள் சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு உணவு செய்தால் அதில் ஆரோக்கியம் நிறைந்திருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு ஏற்ற ஒர உணவு தான் இந்த தேங்காய் பால் பிரியாணி. இதில் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்திருப்பதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் பிரியாணி செய்வது எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ரதேங்காய் பால் அல்வா செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, மராத்தி மொக்கு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, ஜாதி பத்திரி, கல் பாசி சேர்த்து வதக்கவும்.
பின் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன்பிறகு தேங்காய் பால், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் பிரியாணி தயார்.






