- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஒரு சிலருக்கு குழம்பு, ரசம், தயிர், மோர் அப்படின்னா ஊத்தி சாப்பிடறதை விட துவையல் வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல், கொள்ளு துவையல், பாசிப்பயறு துவையல், துவரம் பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல் நிறைய துவையல் வெரைட்டீஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க போற இந்த கொத்தமல்லி துவையல் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இந்த கொத்தமல்லி துவையில்ல இட்லி, தோசை சப்பாத்தி பூரி பழைய சாதம் சுடு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சிலருக்கு இந்த கொத்தமல்லி துவையல் சுத்தமா பிடிக்காது ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா கொத்தமல்லி துவையலை சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கொத்தமல்லி நம்ம அடிக்கடி உடம்புல சேர்த்துக்கிட்டோம் அப்படின்னா நம்ம உடம்புல இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாகும் உடம்புல இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறும். நிறைய நன்மைகள் இருக்கக்கூடிய இந்த கொத்தமல்லிய நம்ம என்னதான் குழம்புல சாதத்துல இருந்து போட்டாலும் அது எடுத்து அப்படியே ஓரமா வச்சிடுவாங்க சாப்பிடவே மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி துவையல் செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா இந்த துவையலோட முழு சத்துக்களும் நம்ம உடம்புக்கு கிடைக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்க கூடிய இந்த துவையல் குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம்.
இந்த துவையல் செஞ்சு முடிச்ச உடனே இதுல சுட சுட சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி துவையல் சாதமா மாத்தி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம். பழைய சாதத்துக்கு இந்த துவையலை தொட்டுக்கிட்டு சாப்பிட்டோம் அப்படின்னா ரெண்டு தட்டு பழைய சாதம் சாப்பிடலாம். அவ்ளோ ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்க கூடிய இந்த கொத்தமல்லி துவையலை நீங்களும் வீட்டில் ஒரு தடவ செஞ்சு பாருங்க. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இது சுவையான கொத்தமல்லி துவையல ஆரோக்கியமா சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான புடலங்காய் தோல் துவையல் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கட்டி பெருங்காயத்தை சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் கால் கப் உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்ததும் அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
புளியை சேர்த்து நன்றாக வறுத்ததும் கழுவி நறுக்கி வைத்துள்ள ஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொத்தமல்லி இலைகள் சிறிதளவு சுருங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள பெருங்காயத்தையும் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான கொத்தமல்லி துவையல் தயார்.






