Advertisement
சைவம்

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட சூப்பரான கொத்தமல்லி புலாவ் இப்படி செஞ்சு பாருங்க!

Advertisement

என்னதான் நிறைய குழம்பு வகைகள் சார்ந்த உணவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபீஸ் போறவங்களுக்கு ஸ்கூல் போறவங்களுக்கு எல்லாருக்கும் டிபன் பாக்ஸுக்கு கலவை சாதங்கள் தான் கொடுத்து விடுவோம். காரணம் அதுதான் மதியத்துக்கு சாப்பிடுவதற்கு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் கெட்டுப் போகாம ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அந்த வகையில ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான கலவை சாதம் பிடிக்கும் தக்காளி சாதம் புளி சாதம் தயிர் சாதம் மாங்காய் சாதம் புதினா சாதம் லெமன் சாதம் காய்கறி சாதம்னு எக்கச்சக்கமான கலவை சாதங்கள் இருக்கு.

அந்த வகையில இப்ப நம்ம கொத்தமல்லி புலாவ் பாக்க போறோம். ரொம்ப வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கும் ரொம்பவே ருசியா இருக்கும். மதியத்துக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு டிபன் பாக்ஸ்ல இந்த கொத்தமல்லி புலாவ் கொடுத்துவிட்டால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கூடவே முட்டை தொக்கு சைட் டிஷ்ஷா வெச்சா குழந்தைங்க ரொம்பவே குஷி ஆகி சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க. நம்ம கொத்தமல்லி இலையும் புதினாவும் சேர்த்து புதினா சாதம் செஞ்சிருப்போம் ஆனால் பாஸ்மதி அரிசி வச்சு செய்யக்கூடிய இந்த கொத்தமல்லி புலாவ் சாப்பிடறதுக்கே ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.

Advertisement

கொத்தமல்லி இலைகளை நம்ம ஏதாவது ஒரு உணவுல சேர்த்தா கண்டிப்பாக குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.கொத்தமல்லி இலைகளை தனியா ஒதுக்கி வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க ஆனால் கொத்தமல்லி உடம்புல இருக்க ரத்தத்தை சுத்தம் படுத்தும். அதனால இந்த கொத்தமல்லியை குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா சாப்பிடணும். அந்த வகையில் கொத்தமல்லியை அரைச்சு செய்யக்கூடிய கொத்தமல்லி புலாவ் சாப்டா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி புலாவ் எப்படி டேஸ்டா செய்வது என்று பார்க்கலாம்

கொத்தமல்லி புலாவ் | Coriander Pulao Recipe In Tamil

Print Recipe
கொத்தமல்லி இலைகளை நம்ம ஏதாவது ஒரு உணவுல சேர்த்தா கண்டிப்பாக குழந்தைகள்
Advertisement
சாப்பிட மாட்டாங்க.கொத்தமல்லி இலைகளை தனியா ஒதுக்கி வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க ஆனால் கொத்தமல்லி உடம்புல இருக்க ரத்தத்தை சுத்தம் படுத்தும். அதனால இந்த கொத்தமல்லியை குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா சாப்பிடணும். அந்த வகையில் கொத்தமல்லியை அரைச்சு செய்யக்கூடிய கொத்தமல்லி புலாவ் சாப்டா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி புலாவ் எப்படி டேஸ்டா செய்வது என்று பார்க்கலாம்
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Coriander Pulao
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 321

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்று வதக்கவும்.
  • அனைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 1 1/2 கப்  தண்ணீர்சேர்த்து கொதிக்க வைக்கவும்
  • பிறகு பாஸ்மதி அரிசியை சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • இப்போது சுவையான கொத்தமல்லி புலாவ் அட்டகாசமான டேஸ்ட்டுடன் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 22g | Sodium: 18mg | Potassium: 71mg | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 46mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

Advertisement
Ramya

Recent Posts

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

8 நிமிடங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

1 மணி நேரம் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

6 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

15 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

16 மணி நேரங்கள் ago