மொறு மொறு சோள மாவு தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் இருக்கிறோம். அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் மசால் தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

இது போன்று சோள மாவு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான சோள மாவு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

சோள மாவு தோசை | Corn Dosai Recipe in Tamil

இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று சோள மாவு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Dosai, தோசை
Yield: 4 People
Calories: 242kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை சோளம்
  • 1 கப் பச்சரிசி
  • 2 tbsp ஊளுந்த பருப்பு
  • 1 tsp உப்பு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை எடுத்து கொண்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு அலசிய பொருட்களை தனிதனியாக ஒரு பவுளில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  • பின் கிரைண்டர் அல்லது மிக்ஸி எடுத்து கொண்டு முதலில் சோளத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும் பின் பச்சரிசியை அரைத்து கொள்ளவும் பின்பு உளுந்த பருப்பை அரைத்து கொள்ளவும்.
  • பின் நாம் அரைத்த மூன்று மாவையும் ஒன்றாக கலந்து கொண்டு பின் சிறிது உப்பு சேர்க்கவும். பின் இந்த ஒரு இரவு முழுவதும் புளிக்க வைத்து கொள்ளவும். பின் மறுநாள் மாவை தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து கொள்ளுங்கள்.
  • பின் வழக்கம் போல் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தேய்த்து பின் இரண்டு கரண்டி மாவை ஊற்றி விரித்து விட்டு இருபுறம் வைகவைத்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சோள தோசை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 600gram | Calories: 242kcal | Carbohydrates: 58g | Protein: 21g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 372mg | Fiber: 16g | Sugar: 4g | Vitamin C: 2mg | Calcium: 8mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here