பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகி விடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை.கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். சளி தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து நண்டு சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
இதுவரை எத்தனையோ வகையான நண்டு உணவுகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் நண்டு வைத்து லாலிபாப் செய்து சுவைத்ததுண்டா? இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு மொருமொருப்பாக இருக்கும். மேலும் இது மாலை வேளையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். குழந்தைகளுக்கு நண்டு சாப்பிட தெரியாது. நண்டை லாலிபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நண்டை வைத்து லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நண்டு லாலிபாப் | Crab Lolipop Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கி நண்டு
- 4 பிரெட் துண்டுகள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 2 பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- பிரெட் க்ராம்ஸ் தேவையான அளவு
- 2 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்
செய்முறை
- முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து விட்டு, அதன் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் நண்டுவின் சதை பகுதி மற்றும் பிரெட்டை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் நறுக்கிய வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, மிளகு தூள், அரைத்த நண்டு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் நண்டு காலை குத்தி வைத்துக் கொள்ளவும்.
- பின் கார்ன் பிளவரை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணிரில் நண்டு லாலிபாப்பை புரட்டி பின் பிரெட் தூளில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான நண்டு லாலிபாப் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!