- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் தக்காளியை அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெரியவர்கள் விரும்பி சாப்பிட்டாலும் குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை சாப்பாட்டில் இருந்தாலும் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தக்காளியில் லைகோபீன், வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வையை பாதுகாத்து, எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தக்காளி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தோலைப் பாதுகாக்கிறது. எனவே, நீங்கள் ரெம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த தக்காளியை சூப் செய்து பருகுவது நல்லது. இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது. இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொங்கு நாட்டு தக்காளி கிரேவி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, கொத்தமல்லி, குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு, சர்க்கரை, காஷ்மீர் மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின் தண்ணீர் வற்றி நன்கு வெந்து வந்ததும் இறக்கவும். இது ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வடிகட்டி வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் பிரெஷ் கிரீம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கிரீமி தக்காளி சூப் தயார்.






