- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
வீட்ல சாதம் மீந்து போச்சு அப்படின்னா அதுல புளி சாதம் லெமன் சாதம் கிளறி சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் அப்படியே பழைய சாதமா சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் அதுல வடகம் போட்டு சாப்பிடுவாங்க. அப்படி இருக்கும்போது இந்த மாதிரி மீந்து போனதை வச்சு ஏதாவது புதுசா செஞ்சு அதை வீணாக்காமல் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில இட்லி மீந்து போச்சு அப்படின்னா நமக்கெல்லாம் தெரிஞ்சது சூரியவம்சம் இட்லி உப்புமா தான்.
இப்போ சில்லி இட்லியா கூட செய்யலாம் ஆனா ஒரு தடவை இந்த மாதிரி தயிர் வச்சு இட்லியையும் வச்சு சூப்பரான தயிர் இட்லி செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும். தயிர் பிரியர்களுக்கு இது ஒரு சூப்பரான வரப்பிரசாதம் அப்படின்னு சொல்லலாம். இந்த தயிர் இட்லி ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிளா சாப்பிடுறதுக்கு ரொம்பவே ருசியா இருக்கும். தேங்காய் பச்சை மிளகாய் முந்திரி பருப்பு எல்லாம் அரைச்சு சேர்க்கும்போது நல்ல வாசனையோட சாப்பிடுறதுக்கு ரிச்சான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும்.
தயிர் சேர்க்கும் போது நல்ல கிரீமியான தயிரா சேர்த்தா சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான தயிர் இட்லியை காலையில டிபனுக்கும் சாப்பிடலாம் மதியம் லஞ்சுக்கும் சாப்பிடலாம் மேல காரா பூந்தி கேரட் துருவல் எல்லாம் சேர்த்து சாப்பிடும் போது ரொம்ப ரொம்ப டேஸ்டாகவே இருக்கும். இந்த டேஸ்டான தயிர் இட்லி ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் எப்போ இட்லி மீந்து போனாலும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் இந்த தயிர் இட்லி ரெசிபியை தான் கேட்பாங்க.
அஞ்சு நிமிஷத்துல சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகளுக்கு கூட லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபியை கொடுத்துவிடலாம். மீந்துபோன இட்லியில் மட்டுமில்லாமல் பிரெஷா இட்லி சுட்டும் இந்த ரெசிபியை செய்யலாம். மினி இட்லி செஞ்சு கூட ட்ரை பண்ணி பார்க்கலாம் இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான தயிர் இட்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தக்காளி தயிர் குழம்பு
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் முந்திரி பருப்பு பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லியை சதுர வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தயிர் ஊற்றி அரைத்து வைத்ததை ஊற்றி கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கார பூந்தி தூவி பரிமாறினால் சுவையான தயிர் இட்லி தயார்.






