Advertisement
சைவம்

சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!

Advertisement

இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலை நெல்லிப் பொடி. இதை நாம் இப்போது எல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் வாரத்தில் ஒரு முறையாவது இந்த கறிவேப்பிலை மற்றும் நெல்லி நம் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை நெல்லிப் பொடியை உணவில் எடுத்துக் கொண்டாலும் தவறு கிடையாது. சரி இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகளும் சாப்பிட மாட்டாங்க. பெரியவர்களும் சாப்பிட மாட்டாங்க. கறிவேப்பிலை நெல்லிப் பொடி செய்து கொடுத்துப் பாருங்கள் தினமும்  இட்லி தோசைக்கு வைத்து தொட்டு சாப்பிட்டால் போதும்.,சுடச்சுட சாதத்தில் இந்த இட்லி பொடியை போட்டு 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான்.

கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை மோரில் அளந்து குடித்தாலும் சுவையும் அருமையாக இருக்கும். ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான நீங்களும் வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு தட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை எப்படி சுலபமாக நாமும் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

Advertisement

அழகா இருக்கணும், தலை முடி கருகருன்னு இருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்த மாதிரி ஒரு கறிவேப்பிலை நெல்லிப் பொடியை அரைத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் போதும். முக்கியமாக உடல் மேனி அழகு ஆரோக்யமான உணவிலுருந்தே பெற முடியும்.உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கறிவேப்பிலை நெல்லிப் பொடியை சுலபமாக எப்படி அரைப்பது ரெசிபி இதோ உங்களுக்காக.

கறிவேப்பிலை நெல்லிப் பொடி | Curry Leaves Amla Powder

Advertisement
RecipeMaker.userRating.enter(this)" onfocus="window.WPRecipeMaker.userRating.enter(this)" onmouseleave="window.WPRecipeMaker.userRating.leave(this)" onblur="window.WPRecipeMaker.userRating.leave(this)" >
Print Recipe
கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை மோரில் அளந்து குடித்தாலும் சுவையும் அருமையாகஇருக்கும். ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான நீங்களும் வீட்டில்தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்குமிகவும் முக்கியமானது. அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வுதட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை எப்படி சுலபமாக நாமும்
Advertisement
தயாரிப்பது? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.அழகா இருக்கணும், தலை முடி கருகருன்னுஇருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்தமாதிரி ஒரு கறிவேப்பிலை நெல்லிப் பொடியை அரைத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் போதும்.முக்கியமாக உடல் மேனி அழகு ஆரோக்யமான உணவிலுருந்தே பெற முடியும்.
 
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Curry Leaves Amla Podi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 66

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 10 நெல்லிக்காய்
  • 1/2 கப் கறிவேப்பிலை
  • 10 காய்ந்தமிளகாய்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும்
  • எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும்
  • பிறகு,அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • காய்ந்திருக்கும் நெல்லியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  • பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும்
  • அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில்" கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.

Notes

 
அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில்” கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.
 
 

Nutrition

Serving: 500g | Calories: 66kcal | Carbohydrates: 15g | Protein: 1.3g | Fat: 0.9g | Potassium: 198mg | Fiber: 6.5g | Vitamin A: 290IU | Vitamin C: 27.7mg | Calcium: 25mg | Iron: 0.31mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

43 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

4 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

16 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

17 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

17 மணி நேரங்கள் ago