- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்களா?அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ்ஷை தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான சைடு டிஷ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு கறிவேப்பிலை மசாலா பன்னீர் செய்யுங்கள். பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரெசிபிஸ் எக்கச்சக்கமா இருக்கு. பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் கிரேவி, ஆப்கானி பன்னீர், பன்னீர் ஸ்டஃப்டு தோசை, பன்னீர் ஸ்டஃப்டு இட்லி, பன்னீர் சப்பாத்தி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.
ஆனால் இன்னைக்கு நம்ம பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரொம்பவே சிம்பிளான ஒரு ரெசிபி தான் செய்யப் போறோம். இந்த கறிவேப்பிலை மசாலா பன்னீர் செய்றது ரொம்ப ரொம்ப ஈசி. இதுக்கு நம்ம செய்ற மசாலாவை பிரெஷா வறுத்து அரைச்சு வச்சோம் அப்படின்னா சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். ரொம்ப டேஸ்ட் ஆகவும் இருக்கும். உங்க வீட்ல செய்யக்கூடிய புலாவ் ஜீரா ரைஸ் ப்ரைட் ரைஸ் அப்படின்னு ரொம்பவே காரம் கம்மியா இருக்கக்கூடிய சாதத்துக்கு இந்த கறிவேப்பிலை மசாலா பன்னீர் செஞ்சா சுவை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த ரெசிபி செய்வதற்கு நம்ம சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு எல்லாத்தையும் சேர்த்து வறுத்து அரைச்சு பொடியாக்கி அந்த பொடியை சேர்த்தோம் அப்படின்னா சுவை பல மடங்கு இருக்கும். இந்த ரெசிபிக்கு வீட்லையே செஞ்ச பன்னீர் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை கொடுத்துவிடலாம். ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட நல்லா விரும்பி சாப்பிடுவாங்க பன்னீரை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான கறிவேப்பிலை மசாலா பன்னீர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பஞ்சாபி பன்னீர் பட்டாணி கிரேவி
Ingredients
Method
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வர மிளகாய் சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கிராம்பு, மிளகு, சோம்பு, சீரகம், மல்லி சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுது, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்கு கலந்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பன்னீர் மசாலாவுடன் சேர்த்து வந்ததும் சிறிதளவு நெய் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை மசாலா பன்னீர் தயார்.






