- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
கருவேப்பிலையை நம்ம தினமும் சாப்பிட்டு வரதால நம்ம உடம்புக்கு நிறைய இரும்பு சத்துக்கள் கிடைக்கும் உடம்புல ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்கிறவங்க கண்டிப்பா தினமும் கருவேப்பிலிக எடுத்துக்கலாம். அது மட்டும் இல்லாம கர்ப்பப்பை கட்டி இருக்கிறவர்களும் கருவேப்பிலை டெய்லி சாப்பிட்டுட்டு வந்தா அவங்களுக்கு கட்டிகள் எல்லாம் சீக்கிரத்துல சரியாகிவிடும். ஆனா நம்ம டெய்லி சமைக்கிற எல்லா சமையலிலும் என்னதான் கருவேப்பிலை போட்டாலும் அந்த கருவேப்பிலையை நம்ம சாப்பிட மாட்டோம் ஆனால் கருவேப்பிலை சாப்பிடுவதால் நிறைய நிறைய நன்மைகள் இருக்கு.
வீட்லயே கருவேப்பிலை பொடி அரைச்சு வச்சு அதை இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம் அப்படி இல்லனா கருவேப்பிலை சட்னி கருவேப்பிலை தொக்கு அந்த மாதிரி செஞ்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். அந்த வகையில இப்ப நம்ம கருவேப்பிலை வச்சு செய்யக்கூடிய காரசாரமான புளிப்பான கருவேப்பிலை பச்சை மிளகாய் பச்சடி தான் செய்யப் போறோம். நிறைய காரம் பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இத நீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க காரம் பிடிக்காதவங்களும் பச்சை மிளகாயை கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கிட்டு கருவேப்பிலை நிறைய சேர்த்து இந்த ஒரு பச்சடியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
தினமும் குழம்பு வச்சு அழுத்து போயிடுச்சா அப்போ இந்த பச்சடி வைத்து இதுக்கு சைடிஷா அப்பளம் வறுத்து சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் பழைய சாதம் மீந்து போச்சுன்னா அதுக்கும் இந்த பச்சடிய வச்சு சைட் டிஷ்ஷா சாப்பிடலாம்.இரண்டு சட்டி பழைய சாதம் இருந்தா கூட சட்டுனு காலியாகிடும் அந்த அளவுக்கு நீங்க சாப்பிடுற சாப்பாட்டை இந்த பச்சடி ஊட்டி விடும் என்றே சொல்லலாம் இப்ப வாங்க இந்த சூப்பரான கருவேப்பிலை பச்சை மிளகாய் பச்சடிய எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான இந்த கறிவேப்பிலை தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள் கறிவேப்பிலை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!
Ingredients
Method
ஒரு கடாயில் மிளகு சீரகம் கடுகு வெந்தயம், மல்லி விதைகள் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, எள் அனைத்தையும் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்தெடுக்கவும்.அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தட்டிய பூண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடி பருப்பு பொடி அனைத்தையும் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறுதியாக துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை மிளகாய் பச்சடி தயார்.






