- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து சத்தாக சமைத்து கொடுப்பீர்களா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்ப்பீர்களா? ஆனால் என்ன தான் கொண்டைக்கடலையை வேக வைத்தோ அல்லது வேறு எப்படி செய்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொண்டைக்கடலையைக் கொண்டு டெல்லி ஸ்டைலில் சென்னா மசாலா செய்து கொடுங்கள். பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும்.
அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை வைத்து சென்னா மசாலா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கிரேவியை சப்பாத்தி, பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சென்னா மசாலாவை செய்வது மிகவும் ஈஸி. அதுமட்டுமின்றி இதில் உருளைக்கிழங்கை சேர்ப்பதால் அசைவ சுவையே மிஞ்சிவிடக் கூடிய அளவிற்கு பிரமாதமாக இருக்கும்.
இந்த சென்னா மசாலா நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம். கொண்டைக்கடலையில் புரதசத்து, நார்சத்து, மாவுச்சத்து போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே அடுத்த முறை பூரி, சப்பாத்தி செய்தால் எப்போதும் வைக்கும் சைடு டிஷ்க்கு பதிலாக, இந்த சென்னா மசாலாவை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான டெல்லி ஸ்டைலில் சென்னா மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கருப்பு கொண்டைக்கடலை கேரள கூட்டுகறி இது போன்று செய்து பாருங்க! அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்!
Ingredients
Method
முதலில் கொண்டைக்கடலையை நன்கு ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, காஷ்மீர் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லி தூள், சன்னா மசாலா, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளி தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு மசித்து விடவும்.
பின் இவை நன்கு கொதித்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், சீரகம், துருவிய இஞ்சி, காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து தாளித்து சென்னா மசாலாவில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான டெல்லி ஸ்டைலில் சென்னா மசாலா தயார்.






