சம்பாரிக்கும் பணம் வீட்டில் தங்க! அந்த பணத்தில் இந்த ஒரு பொருள் மட்டும் வாங்குங்கள் போதும்!

- Advertisement -

இந்த உலகில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை இன்றைய நாட்களில் சிறு குழந்தைகள் உணர்ந்து விட்டனர். அந்த அளவிற்கு பணம் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. ஒவ்வொறு ரூபாயும் சம்பாதிப்பவர்களுக்கு தான் அதனுடைய கஷ்டம் என்வென்று தெரியும். அதற்காக அவன் என்னெல்லாம் கஷ்டப்படுவான் என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி நாம் சம்பாரிக்கும் பணத்தை ஏதாவது சேமிக்க நினைத்தால் நம்மால் கடைசி வரை சேமிக்க முடியாமலேயே போய் விடுகிறது. அதையும் மீறி சேமித்தாலும் ஏதாவது பெரிய செலவு வந்து நாம் சேமிப்பை வீணடித்து விடுகிறது.

-விளம்பரம்-

கடன் பிரச்சனை

அப்போது நாம் சம்பாதிக்கும் பணம் எங்கு தான் போகிறது என்று பார்த்தால் நமக்கே தெரியாமல் வீண் செலவுக்காக விரயமாகிக் கொண்டிருக்கும். நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்போது வரவு செலவு கணக்கு பார்க்கிறோமோ அப்போதுதான் தெரியும் எவ்வளவு பணம் வீண் செலவாகிக் கொண்டிருக்கிறது என்று. இப்படி ஒரு பக்கம் பணம் வீண் விரையமாகிறது என்றால் இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு கடன் வேறு நமக்கு இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஒரு பிரச்சினையாக இருக்கும் இப்படி பணம் சம்பந்தமான பிரச்சினைகள் இல்லாத மனிதய்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

உப்பு

அதனால் இது போன்ற சூழ்நிலைகளை எப்படி ஆன்மீக ரீதியாக எதிர்கொள்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் காண போகிறோம். இப்போது உங்களுக்கு சம்பளம் வருகிறது என்றாலும், நீங்கள் செய்யும் தொழில் வியாபாரம் மூலமாக லாபம் வந்தாலும் அல்லது நாம் கடன் வாங்கும் போது அந்த பணத்தைக் கொண்டு முதலில் வீட்டுக்கு உப்பு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்று நம் இதற்கு முன்னர் ஒரு பதிவில் நாம் பார்த்து இருந்தோம். அதே போல் நம் கைக்கு வரும் பணத்தில் உப்பை தவிர வேறு எந்தெந்த பொருட்கள் வாங்கினால் நம்மிடம் இருக்கும் பணம் செலவாகாமல் நம் கையில் பெருகிக் கொண்டே இருக்கும் என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

துவரம் பருப்பு

இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் வீண் செலவாகாமல் இருக்க. உங்கள் கையிலே பணம் தங்க வேண்டும் என விரும்புபவர்கள் உங்களுடைய கைக்கு வரும் பணத்தில் நீங்கள் முதலாவதாக வாங்க வேண்டியது நீங்கள் வீட்டுக்கு சாம்பார் வைக்க பயன்படுத்தும் துவரம் பருப்பு தான். ஏன் நீங்கள் மளிகை கடைக்கு சிட்டை எழுதினால் முதலில் மங்களகரமாக இருப்பதற்காக மஞ்சள் எழுதுவார்கள் ஆனால் அதற்கு அப்புறமாக நம் வீட்டு தேவைக்கு பயன்படுத்தும் பொருள்களிலே அரிசி பருப்பு தான் இருக்கும். அதில் குறிப்பாக ஏன் துவரம் பருப்பு வாங்க வேண்டும் என்றால் துவரம்பருப்பு என்பது அன்னபூரணி தயாரின் விருப்பப்பட்ட ஒரு தானியம். அதனால் உங்கள் கைக்கு வரும் பணத்தில் முதலில் துவரம் பருப்பு வாங்கும் பொழுது உங்கள் வீட்டில் பண பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. அந்த அளவிற்கு பணம் உங்கள் கையில் பெருகும்.

நல்லது, கெட்டது

நீங்களே சிந்தித்துப் பாருங்களேன் நம் வீட்டில் நல்லது கெட்டது என எந்த விசேஷங்கள், சுப காரியங்கள் நடந்தாலும் அங்கு நாம் பொதுவாக வைப்பது துவரம் பருப்பு பயன்படுத்தி சாம்பார் தான் ஏனென்றால் துவரம் பருப்பின் மகத்துவத்தை நாம் முன்னோர்கள் அறிந்திருந்தால் தான் துவரம்பருப்பு பயன்படுத்தி செய்யப்படும் சாம்பார்க்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். அதனாலே உங்கள் கைக்கு வரும் பணத்தில் இருந்து நீ முதலில் வாங்க வேண்டிய பொருள் துவரம்பருப்பாக இருக்கும்போது அந்த பணம் உங்கள் கையில் நிலையாக தங்கும். அதற்கு அப்புறமாக நீங்கள் சிறுக சிறுக சேமித்துக் கொண்டே இருக்கலாம். நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here