- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, LUNCH
இதுவரை எத்தனையோ ஸ்டைல் பிரியாணி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மிகவும் பிரபலமான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணியை வீட்டிலேயே செய்து சுவைத்ததுண்டா ? ஆம், இன்று இதை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று ஒரு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் பிரியாணியை இது போலா செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்ரி, ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து பொடியாகிக் கொள்ளவும்.
பிறகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை தனியாகவும். கொத்தமல்லி, புதினாவை ஒரு கப்புகள் எடுத்து சேர்த்து தனி தனியாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
அதே போல் சின்ன வெங்காயதை விழுதாக அரைத்து, தக்காளி, பெரிய வெங்காயத்தை தனித்தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, பின்னர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்ரி, பொடியை சேர்க்கவும். மற்றும் பிரிஞ்சி இலையையும் சேர்க்கவும்.நன்கு கிளறவேண்டும்.
அதையடுத்து சின்ன வெங்காய விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய் விழுது, கொத்தமல்லி புதினா விழுது என்று ஒவொன்றாக வரிசையாக போட்டு நன்கு கிளறவும்.
பின்னர் கழுவி சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் போட்டு கிளறிவிட வேண்டும்.
அப்போது அடுப்பில் தீ நன்றாக எரிய வேண்டும். இறைச்சியில் மசாலா சேர்ந்ததும், தேவையான அளவு தயிர், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள்,மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும். (அரிசி 5 கப் என்றால் தண்ணீர் 8 கப் இருக்க வேண்டும்.) நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் குமிழ்விட்டு கொதித்ததும் அரிசியை அதில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்ற தொடங்கியதும் குக்கர் மூடியை மூடிவிட வேண்டும். (மூடில் விசில் போட கூடாது)
5 நிமிடம் கழித்து குக்கர் மூடியை திறந்து நெய்விட்டு கிளறி மூடி விசில் போட வேண்டும். 5 நிமிடங்கள் தீயை மிகவும், குறைத்து வைத்து அணைத்து விடவும். மீண்டும் 5 நிமிடம் கழித்து திறக்கும் போது மணக்கும் திண்டுக்கல் சிக்கன் பிரியாணி தயாராக இருக்கும்.






